சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதே பாசம்.. துளியும் குறையல பாருங்க - ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க, அந்த விழாவில் இன்முகத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காணப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

Recommended Video

    தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் திமுக தலைவர் M.K. Stalin

    தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்வில், 'முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்று ஸ்டாலின் பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்.. கண்ணீர் விட்ட துர்கா.. அப்படியே, நெகிழ்ந்துபோன ஆளுநர் மாளிகை முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்.. கண்ணீர் விட்ட துர்கா.. அப்படியே, நெகிழ்ந்துபோன ஆளுநர் மாளிகை

    மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் சிந்திய காட்சி, காண்போரை நெகிழ்ச் செய்தது. பின்ன சும்மாவா! மேடம் இனி Wife of Tamil Nadu Chief Minister' ஆச்சே!

    உயர்ந்த புருவங்கள்

    உயர்ந்த புருவங்கள்

    மிக மிக எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர், அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். குறிப்பாக, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், பன்னீர் செல்வம் கலந்து கொண்டது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

    சிரித்த முகத்துடன்

    சிரித்த முகத்துடன்

    எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் ஓ.பி.எஸ் பெரிதாக யாரிடமும் வம்பு தும்பு வைத்துக் கொள்ளாதவர். கட்சியிலும் அவரது அணுகுமுறை சாஃப்ட் மோடில் தான் இருக்கும். ஜெயலலிதா இறந்த போது, முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்ற போது கூட, சட்டசபையில் திமுகவினரிடம் அவர் சிரித்த முகத்துடன் பேசியது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.

    முகத்தை திருப்ப முடியாது

    முகத்தை திருப்ப முடியாது

    அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் சட்டசபையில் பேசிய காட்சிகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, செய்தியாளர்கள் ஓ.பி.எஸ்.ஸிடம் கேட்ட போது கூட, எதிரே வரும் அவர்கள் என்னைப் பார்த்து ஒரு மரியாதைக்காக சிரிக்கும் போது, நான் எப்படி முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல முடியும்? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

    பெரிய ஆச்சர்யமில்லை

    பெரிய ஆச்சர்யமில்லை

    அப்படி திமுக பரம எதிரி கட்சியாக இருந்தாலும், அவர்களுடன் மென்மையான அணுகுமுறை கொண்டிருந்தவர் ஓ.பி.எஸ். 2021 சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்த அளவுக்கு ஓ.பி.எஸ். பெரிதாக விமர்சிக்கவில்லை. தேர்தல் கர்டஸிக்காக சில இடங்களில் விமர்சித்தாரே தவிர, எடப்பாடி அளவுக்கு காரசார மோதலின்றி பார்த்துக் கொண்டார். இப்படியாக, மு.க.ஸ்டாலினிடமும், திமுகவினரிடமும் ஒருவித சாஃப்ட் கார்னர் காட்டும் ஓ.பி.எஸ். இன்று அதிமுக சார்பில் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டதில் பெரிய ஆச்சர்யமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

    English summary
    OPS paticipated stalin swearing in ceremony - மு.க.ஸ்டாலின்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X