சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் உரையில்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து தள்ளிய ஓ.பன்னீர் செல்வம்

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை குவித்து வருவதவாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதிமுகவுக்காக ஓ.பன்னீர் செல்வம் தீவிர பிரச்சாரம் செய்யவில்லை என திமுக தலைவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு முதல்வரை பாராட்டி பேசியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நல் ஆளுமை

நல் ஆளுமை

மத்திய அரசால் வழங்கப்படும் நல் ஆளுமை திறன் பட்டியலில் தமிழக அரசு முதலில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தியா டுடே பத்திரிக்கையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒட்டு மொத்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முதல்வருக்கு பாராட்டு

முதல்வருக்கு பாராட்டு

மாண்புமிகு முதல்வர் விவசாயியாக இருப்பதால், விவசாயிகள் கஷ்டத்தை புரிந்து கொண்டு பல நடவடிக்கை எடுத்துள்ளார், வேளாண் கடன் தள்ளுபடி என்னும் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை முதல்வர் எடுத்தார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

 அரசியல் முக்கியத்துவம்

அரசியல் முக்கியத்துவம்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளது, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

அதேநேரம், அதிகரிக்கப்பட்ட வரி விகித்தால் மத்திய அரசுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்கிறது... ஆனால், மாநிலங்களுக்கு எதுவும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று, இடைக்கால பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தினார்.

English summary
Chief Minister Edappadi Palaniswami's government has been performing well and accumulating various awards, says O.Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X