India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்போ கன்ஃபார்ம்.. திமுக அரசிடம் “ஓபிஎஸ் மகன்” பரபரப்பு கோரிக்கை! சிக்கலில் எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: கொடநாட்டில் அடுத்தடுத்து அரங்கேறிய குற்றங்கள் தொடர்பாக உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 23 ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முந்தைய பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அடுத்த பொதுக்குழுவுக்கு தடை வேண்டுமெனில், தனி நீதிபதியை அணுகுமாறும் அறிவுறுத்தி வழக்கை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி

கொடநாடு விவகாரம்

கொடநாடு விவகாரம்

இதற்கிடையே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. அந்த வழக்கை விசாரித்து வந்த எஸ்.ஐ. முஹம்மது ரபீக் உயிரிழந்த நிலையில், கொலையாளிகளுடன் பேரம் பேசியவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் என நமது அம்மா முன்னாள் ஆசிரியரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மருது அழகுராஜ் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மருது அழகுராஜ் பதிவு

மருது அழகுராஜ் பதிவு

"கொடநாடு கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை சந்தித்து பேரம் பேசிய பிரதான நிகழ்வை பின்தொடர்ந்தது விசாரித்ததில் அந்த குற்றவாளிகள் கைகாட்டுவது இளங்கோவன் என்கிற அஇஅதிமுக அதிமுக்கிய பிரமுகரை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி. அதுசரி... இவருக்கு தானே எடப்பாடி பன்னெடுங்காலமாகலன்வபம் வைத்திருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை சமீபத்தில் தரைப்பாடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடியால் ஓரம் கட்டப்பட்டவர்கள்

எடப்பாடியால் ஓரம் கட்டப்பட்டவர்கள்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை அதிமுகவிலிருந்து அவராலும், அவரது ஆதரவாளர்களாலும் ஓரம்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளையும், ஜெயலலிதா அபிமானிகளையும் சந்தித்து கொடநாடு கொலை விவகாரம் குறித்து விளக்கி எடப்பாடிக்கு எதிர்ப்பு அலையை உருவாக்கிட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது என்று நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

ஜெயபிரதீப் பதிவு

ஜெயபிரதீப் பதிவு

இதனையே ஓ.பன்னீர்செல்வம் மகன், ஜெயபிரதீபின் பதிவும் தற்போது காட்டுகிறது. "கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
O.Panneerselvam's son Jayapradeep request TN government to take action against Kodanadu criminals: கொடநாட்டில் அடுத்தடுத்து அரங்கேறிய குற்றங்கள் தொடர்பாக உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X