சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு.. மாறி மாறி பேசுவது திமுகவுக்கு கைவந்த கலை -ஓ.பன்னீர்செல்வம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலை என விமர்சித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

பெட்ரோல் மற்றும் டீசலை சேவைகள் வரியின் வரம்புக்குக் கீழ் கொண்டு வரும் விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னையில்</a><a href= பிரபல தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ. 2000 கோடி நிலம்.. அதிரடியாக மீட்ட அரசு" title="சென்னையில் பிரபல தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ. 2000 கோடி நிலம்.. அதிரடியாக மீட்ட அரசு" />சென்னையில் பிரபல தனியார் கல்லூரி ஆக்கிரமித்திருந்த ரூ. 2000 கோடி நிலம்.. அதிரடியாக மீட்ட அரசு

பத்திரிகைகள்

பத்திரிகைகள்

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்புக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் செய்தி 25-01-2018 அன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றுதான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய திமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாறிவிட்டது.

லக்னோ கூட்டம்

லக்னோ கூட்டம்

நேற்று லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில்,திமுக சார்பில் நிதி அமைச்சர் கலந்து கொள்ளாவிட்டாலும், அவர் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், 'மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும், இதையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை' என்றும் தெரிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

மக்கள் மனதில்

மக்கள் மனதில்

அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு பிந்தையை திமுகவின் நிலைப்பாடு. இதன் விளைவாக, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

தலையிடுக

தலையிடுக

எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம், பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து திமுகவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்ற திமுகவின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்.

English summary
O.Panneerselvam says, DMK double stand in Petrol and diesel tax issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X