சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தந்தைக்கு உச்சம் பெற்ற 9 கிரகங்கள்.. மகனுக்கு உச்சம்பெறவில்லையோ... தவறிப்போன அமைச்சர் வாய்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓ.பி.எஸ். மகனுக்கு அமைச்சர் பதவி... அதிமுகவில் விரிசல் ஏற்படுமா?- வீடியோ

    சென்னை: ஒன்பது கிரகங்களும் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு உச்சம் பெற்ற காரணத்தால் முதல் முறை எம்எல்ஏ ஆனபோது தமிழகத்தின் முதல்வர் ஆனார். இப்போது அவரது மகன் முதல் முறை எம்பியான போதிலும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

    1995-96களில் பெரியகுளத்தில் நகராட்சி தலைவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஓ .பன்னீர்செலவம். 1998ம் ஆண்டு டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அங்குவந்தார்.

    அப்போது அவருடன் நெருக்கமான பன்னீர் செல்வம் தீவிரமாக வேலை செய்தார். 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரியகுளம் எம்பியாக டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பணி பிடித்து போகவே ஜெயலலிதாவின் அறிமுகமும் ஒ பன்னீர்செல்வத்துக்கு கிடைத்தது.

    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல்... முழு விவரம்

    போட்டியிடாத ஜெயலலிதா

    போட்டியிடாத ஜெயலலிதா

    இதனால் 2001ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வென்றார் ஒ பன்னீர்செல்வம் அப்போது ஜெயலலிதாவுக்கு 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்த சர்ச்சை மற்றும் வழக்கு சர்ச்சை காரணமாக போட்டியிட முடியவில்லை. இதனால் ஒ பன்னீர்செல்வம் 2001ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக முதல்வரானார். அதன் பின்னர் 2002ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் நின்று ஜெயலலிதா வென்று முதல்வரானார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர்

    அதன்பிறகு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும், முதல்வராகவும், இருந்த ஒ பன்னீர்செல்வம், தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இத்துடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

    2014ல் ஏமாற்றம்

    2014ல் ஏமாற்றம்

    தனது தந்தையைப்போல் அரசியல் களத்தில் குதித்த அவரது மகன் ரவீந்திரநாத், கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டே தேனி தொகுதி எம்பி தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பார்த்திபனுக்கு கிடைத்தது. ஆனால் 2019ம் ஆண்டு ரவீந்திரநாத்துக்கு கிடைத்துவிட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஒபி ரவீந்திரநாத், தேனியில் வெற்றியும் பெற்றார்.

    தந்தையைப்போல் அதிர்ஷ்டம்

    தந்தையைப்போல் அதிர்ஷ்டம்

    அவரது தந்தை ஒ பன்னீர்செல்வம் எப்படி முதல் முயற்சியிலேயே முதல்வர் என்ற பொறுப்பை அதிர்ஷ்டவசமாக பெற்றாரோ, அதேபோல் தான் ரவீந்திரநாத் அமைச்சராகவும் வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் யாரும் வெல்லாத நிலையில் வென்றது ரவீந்திரநாத் மட்டுமே என்ற நிலையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

     தவறிப்போன வாயப்பு

    தவறிப்போன வாயப்பு

    ஆனால் அவரது தந்தைக்கு உச்சம் பெற்ற கிரகங்கள் , ரவீந்திரநாத் உச்சம் பெறவில்லையோ என்று தோன்றுகிறது. ஏனெனில் அவருக்கு மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை

    English summary
    TN DY CM O panneerselvam son raveendranath get good post after fist time win, like his father get cm post in 2001
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X