சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் நிரந்தர முதல்வர், அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர்.. ஓபிஎஸ் வீடு முன்பு 13 பேர் முழக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் நிரந்தர முதல்வர், அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஓபிஎஸ் என சென்னையில் அவரது இல்லத்தின் முன்பு 13 பேர் கூடி நின்று முழக்கம் எழுப்பினர்.

Recommended Video

    நிரந்தர பொது செயலாளர் ஓபிஎஸ்.. ஓபிஎஸ் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் முழக்கம் - வீடியோ

    அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அலை அலையாக தொண்டர்கள் அவரது இல்லத்தின் முன்பு குவிந்திருந்தனர். மக்களின் முதல்வர் என்றெல்லாம் கூட போற்றப்பட்டார்.

    மக்களுக்கு அடிமையான ஆட்சிதான் நடத்துகிறோம்.. வேறு யாருக்கும் அடிமை இல்லை: மாஜி எம்.பி. ப.குமார்மக்களுக்கு அடிமையான ஆட்சிதான் நடத்துகிறோம்.. வேறு யாருக்கும் அடிமை இல்லை: மாஜி எம்.பி. ப.குமார்

    தொண்டர்கள் ஆதரவு இல்லை

    தொண்டர்கள் ஆதரவு இல்லை

    தர்மயுத்தத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டு அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் ஓபிஎஸ். பின்னர் அதிமுக ஆட்சியில் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். ஆனால் அதிமுக தொண்டர்களின் முந்தைய ஆதரவு அவருக்கு கிடைக்காமலே போனது.

    அதிருப்தியில் தொண்டர்கள்

    அதிருப்தியில் தொண்டர்கள்

    ஓபிஎஸ் முகாமில் இருந்த பலரும் முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவிவிட்டனர். இப்போது விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர்தான் ஓபிஎஸ் அணியில் இருக்கின்றனர். தற்போதைய முதல்வர் வேட்பாளர் பிரச்சனையிலும் ஓபிஎஸ் மீது அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்.

    தேனியில் மட்டும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

    தேனியில் மட்டும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு

    அவர்களைப் பொறுத்தவரையில் இது தேவை இல்லாத விவகாரம்; இதை ஏன் இப்போது ஓபிஎஸ் கிளப்புகிறார் என்பதுதான் கோபமாக இருக்கிறது. தேனியில் ஓபிஎஸ் வீடு, பண்ணை இல்லம் முன்பு குறிப்பிட்ட அளவிலான தொண்டர்கள் திரண்டு அவருக்கான ஆதரவை காட்டினர்.

    ஓபிஎஸ் வீட்டில் 13 பேர் முழக்கம்

    ஓபிஎஸ் வீட்டில் 13 பேர் முழக்கம்

    ஆனால் சென்னையில் ஓபிஎஸ் இல்லம் முன்பு நாள்தோறும் 10 அல்லது 15 பேர் அளவில்தான் தொண்டர்கள் கூடுகிறார்கள். இன்று கூட ஓபிஎஸ் இல்லம் முன்பு 13 பேர் கூடி டிவி கேமராக்களை பார்த்த உடன் தமிழகத்தின் நிரந்தர முதல்வர், அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஓபிஎஸ் என சுரத்தே இல்லாமல் முழக்கம் எழுப்பினர்.

    English summary
    According to the reports Deputy Chief Minister O Panneerselvam may lost AIADMK Cadres Support.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X