சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடைச்சல் கொடுப்பதுன்னு கோதாவில் குதிச்சாச்சு கோவிந்தா... ஓபிஎஸ் தேனி பயணம் திடீர் ரத்து!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளருக்கு மல்லுக்கட்டும் துணை முதல்வர் ஓபிஎஸ் தமது தேனி பயணத்தை திடீரென ரத்து செய்திருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கும் நிலை இருந்தது. ஆனால் திடீரென ஓபிஎஸ் தரப்பு தமக்கே முதல்வர் பதவி என குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

அதிமுக செயற்குழுவிலும் இதே கருத்தை வலியுறுத்தி ஓபிஎஸ் ஆவேசமாக பேசினார். ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, எந்த காரணத்துக்காக முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த கூடாது? 3 ஆண்டுகால நல்லாட்சி நடக்கிறதுதானே? என கிடுக்குப்பிடி போட்டது.

புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி

ஓபிஎஸ் தனி கச்சேரி

ஓபிஎஸ் தனி கச்சேரி

இந்த விவகாரம் முடிவுக்கு வராத நிலையில் தனி ஆவர்த்தன கச்சேரியை தொடங்கி இருக்கிறார் ஓபிஎஸ். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூட்டிய மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார் ஓபிஎஸ். அதேநேரத்தில் வீட்டில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ்.

வீட்டில் ஆலோசனை

வீட்டில் ஆலோசனை

முதல்வர் எடபாடி பழனிசாமியால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாஜி அமைச்சர் மணிகண்டனை வரவழைத்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவில் தனக்கு ஆதரவு இருக்கிறது என காட்டுவதற்கான வேலைகளில்தான் இப்போது ஓபிஎஸ் தரப்பு கவனமாக இருக்கிறதாம்.

டார்கெட் பொதுக்குழு

டார்கெட் பொதுக்குழு

ஏனெனில், தம்மை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம், பொதுக்குழுவை கூட்டி வாக்கெடுப்பு நடத்தினால் எனக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்கும். அதனால் பொதுக்குழுவிலேயே எல்லாவற்றையும் பார்த்து கொள்ளலாம் என கறார் முடிவாக எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது.

ஓபிஎஸ் தேனி பயணம் ரத்து

ஓபிஎஸ் தேனி பயணம் ரத்து

இதனையடுத்து பொதுக்குழுவுக்கு ஆட்சேர்க்கும் வேலைகளில் ஓபிஎஸ் அணி இறங்கி இருக்கிறது. இதற்காகவே தேனி பயணத்தையும் ஓபிஎஸ் ரத்து செய்திருக்கிறாராம். தென்மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பலரையும் வளைப்பது என முடிவோடு இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.

English summary
Deputy CM O Panneersdelvam will meet Senior Party Leaders and cancelled his Theni Visit also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X