சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய மாரத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு டாக்டர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், அரசு மருத்துவர்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டம், வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

Officer appointed for Tamilnadu government doctors demand

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட ட்வீட்டில், நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களை உடனே அழைத்து, அக்கறையுடன் பேசி அவர்களின் கோரிக்கையை முறையாக உடனடியாகப் பரிசீலனை செய்து நிறை வேற்றவும், அசவுகரியங்களுக்கு உள்ளாகியிருக்கும் உள்நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அவசரகால சிகிச்சைக்காக வருவோரின் சிரமங்களைப் போக்கி, மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காலை முதல், 6 மணி நேரம் நடத்திய, பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரியை, நியமனம் செய்வதாக இரவு 8 மணியளவில் அறிவித்தது தமிழக அரசு.

2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில் ராஜ் ஆய்வு செய்வார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. ஊதிய உயர்வு கோரிக்கையை 2 மாதத்தில் நிறைவேற்றி தர எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இரவில் மீண்டும், தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர்.

6 வாரங்களுக்குள், ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தரும் என்று விஜயபாஸ்கர் அப்போது உறுதிமொழியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், 4 நாட்கள் நீடித்து வந்த அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

English summary
The Government of Tamil Nadu has ordered the appointment of an officer to consider the demands of the government doctors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X