சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர் கையில் முத்தம்.. நெற்றியில் சிலுவையிட்டு ஆசி.. கூடவே குட்டி கோரிக்கை.. போரூரில் கலகலப்பு

அமைச்சர் பெஞ்சமினுக்கு முத்தம் தந்து பாட்டி கோரிக்கை வைத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் கையில் முத்தம் கொடுத்த பாட்டி-வீடியோ

    சென்னை: ஆய்வு செய்ய வந்த அமைச்சர் தனக்கு இப்படி ஒரு திடீர் முத்தம் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

    அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் அரசு சென்னை சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2252 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    நேரில் பார்வையிட்டார்

    நேரில் பார்வையிட்டார்

    இதன் பின்னர் ராமாபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ராமாபுரம் ஏரி மீட்கப்பட்டு அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அதனை பார்வையிட அமைச்சர் சென்றார். அப்போது ஏரியை சுற்றிலும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கவும் உத்தரவிட்டு கொண்டிருந்தார்.

    கையில் முத்தம்

    கையில் முத்தம்

    அப்போது ஒரு பாட்டி, அங்கு தள்ளாடியபடியே வந்தார். நின்றுகொண்டிருந்த அமைச்சரின் இரண்டு கைகளை கெட்டியாக பிடித்து கொண்டார். பிறகு படார் என கையில் முத்தம் கொடுத்தார். பிறகு அமைச்சரை மனசார ஆசீர்வாதம் செய்தார். இதனால் அமைச்சர் உட்பட அங்கிருந்தவர்கள் யாருக்குமே ஒரு செகண்ட் எதுவுமே புரியவில்லை.

    முக்கிய பிரமுகர்கள்

    முக்கிய பிரமுகர்கள்

    அமைச்சரின் கையை கெட்டியாக பிடித்து கொண்ட பாட்டி, "எங்கள் ஏரியாவில் தண்ணியே வர்றது கிடையாது" என்று சொல்லி, அமைச்சரை கையோடு அழைத்து கொண்டு சென்றார். அமைச்சர், பாட்டி பின்னாடியே, எம்எல்ஏ அலெக்சலாண்டர், முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சென்றனர்.

    தண்ணி வரல

    தண்ணி வரல

    பாட்டி அமைச்சரை தன் வீட்டுக்கு அருகே கூட்டி வந்து, அங்கிருந்த குழாயடிகளை காண்பித்து "தண்ணீர் எப்பவுமே வராம ரொம்ப கஷ்டப்படறோம்" என்றார். உடனே அமைச்சரும், சரி, சீக்கிரமா உங்களுக்கு தண்ணி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னதும், பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

    விரைவில் ஏற்பாடு

    விரைவில் ஏற்பாடு

    அதனை பார்த்த அமைச்சர் விரைந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து அந்த மூதாட்டி சந்தோசமாக நடந்து சென்றார். இதில் எம்.எல்.ஏ அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறன், கா.சு.ஜனார்த்தனன் உட்பட அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

    English summary
    Grandma Kisses Minister Benjamin and complaints about water supply near Porur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X