• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஓமிக்ரான் வைரஸ் பரவல் :12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் பரவல் காரணமாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்த பின் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil

  தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை உயிரிழக்கவில்லை என்றாலும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது போட்ஸ்வானா, இத்தாலி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, கனடா, இஸ்ரேல் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளன. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் வெளிநாட்டினருக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளன.

  கண்ணீர் விடும் பிரதமர்கள்: கடன் கொடுத்து நாட்டையே அடித்து பிடுங்கும் சீனா- தவிக்கும் குட்டி தேசங்கள்கண்ணீர் விடும் பிரதமர்கள்: கடன் கொடுத்து நாட்டையே அடித்து பிடுங்கும் சீனா- தவிக்கும் குட்டி தேசங்கள்

  ஆர்டிபிசிஆர் பரிசோதனை

  ஆர்டிபிசிஆர் பரிசோதனை

  டிசம்பர் மாதத்திலிருந்து விமான சேவையை தொடங்க திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியா அத்திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. ஓமிக்ரான் பரவியுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  பரிசோதனை ஆய்வக வசரி

  பரிசோதனை ஆய்வக வசரி

  உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா வைரசை 3 மணி நேரத்தில் கண்டறிவதற்கான ஆய்வக வசதிகளை, சென்னை கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தக்பாத் (TAQPATH) எனப்படும் டெஸ்ட் கிட் மூலமான பரிசோதனையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள, சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில், மொத்தம் 12 அரசு ஆய்வகங்களில் இந்த வகை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட உள்ளது.

  7நாட்கள் தனிமை

  7நாட்கள் தனிமை

  புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றை, மரபணு பகுப்பாய்வு முறையில் கண்டறிய வழக்கமாக 7 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள TAQPATH எனப்படும் எனப்படும் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனையை மேற்கொண்டால், 3 மணி நேரத்திலேயே மரபணுவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில், உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி, விரைந்து உரிய சிகிச்சைகைகளை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  ஆர்டிபிசிஆர் பரிசோதனை

  ஆர்டிபிசிஆர் பரிசோதனை

  வெளிநாடுகளில் இருந்து வருவோர் கடந்த 14 நாட்களுக்கான பயண விவரம், நெகட்டிவ் பிசிஆர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசின் ஏர் சுவிதா போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் விமான நிலையத்தில் வந்த பின் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

  நாளை முதல் கட்டுப்பாடுகள்

  நாளை முதல் கட்டுப்பாடுகள்

  அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தை விட்டு வெளியேறக் கூடாது. பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தால், வீட்டுக்குச் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 8வது நாளில் மீண்டும் ஒரு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். அரசின் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

  English summary
  Due to the spread of Omicron, the state government has ordered passengers coming to Tamil Nadu from the UK, South Africa, Brazil, Bangladesh, Botswana, China, Mauritius, New Zealand, Zimbabwe, Singapore, Hong Kong and Israel to take the RTPCR test after arriving at the airport.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  Desktop Bottom Promotion