சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மடங்காக உயர்த்தப்படுகிறது ஆம்னி பேருந்து கட்டணம்.. தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி முடிவு!

தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.

நாடு முழுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

மே 18ல் இருந்து கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு 4.0 அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கைகொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கை

பேருந்துகள் இயக்கம்

பேருந்துகள் இயக்கம்

இந்த ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. வரும் திங்கள் கிழமையில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தனியார் பேருந்துகள் இப்போது இயங்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் அரசு இது தொடர்பாக அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.

ஆம்னி கட்டணம்

ஆம்னி கட்டணம்

இந்த நிலையில் தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க தலைவர் அப்சல் தெரிவித்து இருக்கிறார்.தற்போது அதிகாரபூர்வமாக ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேவை தொடங்கியதும்

சேவை தொடங்கியதும்

ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் இதுவரை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல எவ்வளவு ஆம்னி கட்டணம் செலுத்தப்பட்டதோ அதை விட இரட்டை மடங்கு செலுத்த வேண்டி இருக்கும் என்கிறார்கள். தமிழகத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல உள்ள கட்டணமும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய இழப்பு

பெரிய இழப்பு

லாக்டவுன் காரணமாக கடந்த 40 நாட்களாக ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் அவர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் டிராவல்ஸ் துறை இன்னும் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதை சமாளிக்கும் வகையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டடுள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழக அரசு இதற்கு முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

English summary
Omni bus fare increases double in Tamilnadu after lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X