சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செல்போனில் மூழ்கிய மும்தாஜ்.. பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்த குழந்தை.. சென்னையில்!

பால்கனியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: செல்போனில் அப்படியே மூழ்கி போய்விட்டார் மும்தாஜ்.. அதனால் தன் குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழுந்ததைகூட கவனிக்கவில்லை... தாயின் அலட்சியத்தினால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் அபுதாகீர். டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மும்தாஜ்.. 30 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இர்பான் இவர்களது 2வது மகன்.. ஒன்றரை வயசு குழந்தை.

one and half years old boy death in chennai

இவர்களது வீடு 2-வது மாடியில் உள்ளது. நேற்று முன்தினம் சையத் டீக்கடைக்கு சென்றுவிட்டார். வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு மும்தாஜ் இர்பானுக்கு சாப்பாடு ஊட்டி உள்ளார்.

அப்போது, ஒருசெல்போன் அழைப்பு வரவும் இர்பானை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்து செல்போன் எடுத்து பேசியுள்ளார். அந்த சமயத்தில், திடீரென இர்பான் அழுகை சத்தம் கேட்கவும், மும்தாஜ் ஓடிப்போய் பால்கனியில் எட்டி பார்த்தார்.

நைட் பப்பில் தப்பா நடந்துக்கிட்டார்.. மாடியிலிருந்து தள்ளவும் பார்த்தார்.. நடிகை பரபர புகார்நைட் பப்பில் தப்பா நடந்துக்கிட்டார்.. மாடியிலிருந்து தள்ளவும் பார்த்தார்.. நடிகை பரபர புகார்

அப்போது, அவரது கண் முன்னாடியே குழந்தை கீழே விழுந்தான்.. இதை பார்த்து பதறிக் கொண்டு ஓடினார் மும்தாஜ்.. அக்கம்பக்கத்தினரும் குழந்தைவிழுந்ததை பார்த்துஅலறி அடித்து ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் விழுந்தது கிடந்த இர்பானை தூக்கி கொண்டு, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.. ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். குழந்தை மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
young mother missed her one and half year old baby from 2nd floor and died in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X