சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.. டிடிவி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் பொது விநியோகத்திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் ஆபத்து உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மேலும் இத்திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

One country only ration scheme.. Poor, simple people will be severely affected .. TTV warning

அதில் மக்கள், மொழி, கலாச்சாரம், பண்பாடு, உணவு என எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு சாத்தியப்படாத திட்டத்துடன், மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சாடியுள்ளார்.

இதன் ஒருகட்டமாகவே ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 2020 ஜூன் மாத இறுதிக்குள், அனைத்து மாநிலங்களும் இதில் சேர வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

ஏற்கனவே உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்பு கொண்டு கையெழுத்திட்டதால், தமிழக அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் விலையில்லா அரிசி திட்டம் ரத்தாகலாம் என்ற சூழல் உள்ளது.

மேலும் நடுத்தர வர்கத்தினர் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் எந்த பலனும் பெற முடியாத சூழல் உருவாகி கொண்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரே நாடு ஒர ரேசன் கார்டு திட்டமானது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டால் ஏழை, எளிய மக்கள் பெற்று வரும் விலையில்லா அரிசி உள்ளிட்டவை கேள்விக்குறியாகி விடும்.

வெளிமாநிலங்களில் இருந்து இங்கே குவிந்துள்ள தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களில் கணிசமான பகுதியை வழங்கும் நிலை ஏற்பட்டால், தமிழக மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தமிழக அரசுக்கும் கூடுதல் நிதிச்சுமை உருவாகும்.

எனவே ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்தினை பழனிசாமி அரசு நிராகரிக்க வேண்டும். ஜிஎஸ்டி யில் உரிய பங்கு கிடைக்காத நிலை, உதய் மின்திட்டத்தால் ஏற்படும் நிதிச்சுமை, பேரிடர் நிதிகளை சரியாக வழங்காமல் இழுத்தடிப்பு என மத்திய அரசின் புறக்கணிப்புகளை தட்டி கேட்டு நிதியை பெற முடியாத பழனிசாமி அரசு, இதிலும் அப்படி நடந்து கொண்டால் தமிழக மக்களுக்கு தான் பாதிப்பு.

அன்றாடம் உழைத்து சாப்பிடுகிற மக்களுக்கு ரேசன் பொருட்கள் தான் வாழ்வாதாரம் என்பதை மறந்து விடாமல், உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் உணவுக்கு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்திட வேண்டும் என டிடிவி வலியுறுத்தியுள்ளார்.

English summary
ttV Dinakaran has said that the public distribution program in Tamil Nadu is in danger of being completely disrupted by the one and only ration card scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X