சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது சேர்ந்தா என்ன.. சேராட்டி எங்களுக்கென்ன.. இதுதான் மக்களின் மன ஓட்டம்.. கலகல சர்வே

அமமுக-அதிமுக இணைவது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பாக சர்வே நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்

    சென்னை: அதிமுகவும், அமமுகவும் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் எங்களுக்கென்ன? என்பதுபோலதான் மக்கள் மனஓட்டம் இருக்கிறது என்பது நாம் நடத்திய ஒரு சின்ன சர்வேயில் தெரிய வந்தது.

    அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்ததில் இருந்தே இரு கட்சிகளும் இணைய மாட்டார்களா என்று பலரும் (அந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்) எதிர்பார்த்தனர். சிலர் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் சிலர் பிரிந்தவர்கள் வந்து இணையலாம், கதவு திறந்தே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த "இருவரை" தவிர என்று கண்டிஷன் போட்டும் அதிமுக தலைமையே அழைத்தது!

    ரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா?ரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா?

    பொதுச்செயலாளர்

    பொதுச்செயலாளர்

    ஆனால் கடைசிவரை இரு கட்சிகளும் சேரவே இல்லை. கட்சி தாவி சென்றதில்கூட ஒருசிலர் திமுகவுக்கு சென்றார்களேதவிர அதிமுக, அமமுகவுக்கு செல்லவில்லை. தேர்தலும் நடந்தே முடிந்துவிட்டது. ஆனால் தேர்தலுக்கு மறுநாளே அமமுகவை கட்சியாக பதிவு செய்து, அதன் பொதுச்செயலாளராக ஆனார் டிடிவி தினகரன்.

    நெருக்கம்

    நெருக்கம்

    இப்போது, அதிமுக-அமமுக இணைகிறதோ? என்ற பழைய பேச்சே திரும்பவும் ஆரம்பமாகி உள்ளது. அதற்கேற்றார்போல் தொகுதிகளில் அமமுக, அதிமுக பூத் ஏஜெண்ட்டுகள் ஒருவருக்கொருவர் நெருக்கம் காட்டி கொண்டதாகவும் தகவல்கள் வந்தன.

    ஆப்ஷன்கள்

    ஆப்ஷன்கள்

    இதையெல்லாம் மனதில் வைத்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் ஒரு கேள்வி கேட்டோம் வாசகர்களிடம். அதன் தலைப்பு, "அதிமுக, அமமுகவுக்கு இதில் எது பொருத்தமாக இருக்கும்?" என்பது. அதற்கு ஆப்ஷன்களும் தரப்பட்டன. அதாவது "அதிமுக-அமமுக இணைப்பு மற்றொன்று, "தனித்தனி கட்சி", இன்னொன்று "ரொம்ப முக்கியம்" என்பதுதான் அந்த ஆப்ஷன்கள்.

    ரொம்ப முக்கியம்

    ரொம்ப முக்கியம்

    இதில் "அதிமுக-அமமுக இணைப்பு" என்ற ஆப்ஷனுக்கு 23.78 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. "தனித்தனி கட்சி" என்ற ஆப்ஷனுக்கு 15.86 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. "ரொம்ப முக்கியம்" என்ற ஆப்ஷனுக்கு 60.35 சதவீதம் வாக்குகள் குவிந்துவிட்டன. அதாவது இரு கட்சி இணைவது சம்பந்தமாக யாருமே பெரிசா ஒன்னும் அலட்டிக் கொள்ளவில்லை என்று இதன்மூலம் தெரிகிறது.

    இரட்டை இலை

    இரட்டை இலை

    ஆனால் தினகரனோ, இரட்டை இலை சின்னம் மேல்முறையிடு, அதிமுக உரிமை கோரும் வழக்கு என தாறுமாறாக இறங்க ஆரம்பித்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் முதல் ஆபஷனுக்கு அந்த 23.78 சதவீதம் ஓட்டு போட்டார்களே.. அவர்களுக்கே இவை சாதகமாகும் என்றே தெரிகிறது.

    English summary
    An Opinion Poll was held in One India Tamil about AMMK and AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X