சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மக்களே.. இன்னும் முடியல.. "ஒரு ஸ்பெல் வெயிட்டிங்.." அலர்ட் செய்யும் தமிழ்நாடு வெதர்மேன்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று மற்றும் நாளை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடைசியாக ஒரு ஸ்பெல் மழை காத்து கொண்டு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    New Cyclone | அந்தமான் & அரபிக் கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்

    வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவியதன் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா? Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

    மழை குறையும்

    மழை குறையும்

    இந்த நிலையில்தான் நவம்பர் 29ம் தேதி இரவு உடன் படிப்படியாக சென்னையில் மழை குறையத் தொடங்கிவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன், சென்னை வெதர், சென்னை ரெயின்ஸ் உள்ளிட்ட பல தனியார் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருந்தனர்.

    சூரிய தரிசனம்

    சூரிய தரிசனம்

    அதன்படி இன்று காலை சென்னையில் சூரிய பகவான் தரிசனம் கொடுத்துள்ளார். வானம் தெளிவாக காணப்படுகிறது. எனவே மழை ஓய்ந்துவிட்டது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இன்று காலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

    வெதர்மேன்

    வெதர்மேன்

    அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் ஒரு கடைசி ஸ்பெல் மழை காத்துக்கொண்டிருக்கிறது. இன்று முதல் நாளை வரை காலை வரை கடைசியாக ஒருமுறை, மழை விளையாடும். நாளை மதியம் முதல் மழை வேகமாக குறைந்து விடும். மேற்கு உள் மாவட்டங்கள், தெற்கு தமிழ்நாடு ஆகியவை இனிமேல் நல்ல மழை பெறும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் நல்ல மழை பொழிவை பெரும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

     ஓயவில்லை

    ஓயவில்லை

    மழை ஓய்ந்துவிட்டது என்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்ட மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த முக்கிய அலர்ட்டை பிறப்பித்திருக்கிறார். எனவே மக்களே குடைக்கு ஓய்வு கொடுத்து விடாதீர்கள். குடையுடன் வெளியே கிளம்பிச் செல்லுங்கள்.

    மழை சாதனை

    மழை சாதனை

    தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட மற்றொரு ட்வீட் பதிவில், சென்னை மாநகரில் (நுங்கம்பாக்கம்) நவம்பர் மாதம் அதிக மழை பொழிவு பெற்ற வருடங்கள் அடிப்படையில், 2021மாவது வருடத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

    1. 1918 - 1088.3 மிமீ
    2. 2015 - 1049.3 மி.மீ
    3. 2021 - 1044.3 மி.மீ
    4. 1985 - 983.0 மிமீ
    5. 1884 - 850.6 மிமீ
    6. 1960 - 849.5 மி.மீ
    7. 1815 - 842.8 மிமீ
    8. 1922 - 833.9 மிமீ
    9. 1896 - 831.9 மிமீ
    10. 1997 - 831.9 மிமீ

    இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

    English summary
    One last spell remains today to tomorrow morning for KTCC (Chennai and 100 kms) and then rain reduces drastically from tomorrow noon Western interior & south TN will get rains from the pull effect. Coimbatore, Tiruppur, Erode will join today. Tuty & other districts will see rains, says, Tamil Nadu Weatherman, Pradeep John.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X