சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுபஸ்ரீ பலியான பள்ளிகரணையில் மீண்டும் சரிந்து விழுந்த 60 அடி உயர பேனர்.. அதிர்ச்சியில் மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ மீது பேனர் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி | Chennai Subashree Accident CCTV Video

    சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான அதே பகுதியில் பேனரை அகற்றும் போது மீண்டும் பேனர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). பிடெக் முடித்துள்ள இவர் கனடா நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக தகுதி தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்து கிடந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளிகரணைக்கு அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சாலையோரம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்திருந்த பேனர் சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார் சுபஸ்ரீ.

    குரல்கள்

    குரல்கள்

    அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.

    விளம்பர போர்டு

    விளம்பர போர்டு

    இதனால் சாலையோரங்களில் உள்ள பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சுபஸ்ரீ உயிரிழந்த பகுதியில் இருந்து 50 அடி தூரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் விளம்பர போர்டு இருந்தது.

    அனுமதி

    அனுமதி

    60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். பேனரை அகற்றும் போது ராஜேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மக்கள்

    மக்கள்

    சுபஸ்ரீ இறந்த இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் மீண்டும் ஒரு பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அறிந்த மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சாலையோரம் நடந்து செல்லவே அச்சமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    English summary
    One more banner fell down in Pallikaranai while removing banner, a worker gets injury.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X