சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. தொடர் இருமல்.. "நீலாவை" தொடர்ந்து அடுத்த சிங்கமும் பலி.. வண்டலூர் பூங்காவில் ஷாக்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பத்மநாபன் என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது. இது இரண்டாவது மரணம் ஆகும்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக குறைந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக கேஸ்கள் குறையாத நிலையில் பல்வேறு உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. 5 லட்சம் டெபாசிட்.. திட்டத்தை துவங்கி வைத்தார் ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.. 5 லட்சம் டெபாசிட்.. திட்டத்தை துவங்கி வைத்தார் ஸ்டாலின்

அமெரிக்காவில் கடந்த அலையின் போதே சிங்கம் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா ஏற்பட்டது.

 கொரோனா

கொரோனா

அதன்பின் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றுக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அந்த சிங்கத்திற்கு மற்ற சிங்கங்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த பூங்காவில் மொத்தம் 13 சிங்கங்கள் உள்ளன.

 9 சிங்கங்கள்

9 சிங்கங்கள்

இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இரண்டு சிங்கங்களுக்கு 'கெனைன் டிஸ்டம்பர்' என்ற புதிய வகை வைரஸ் தாக்குதலும் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது விலங்குகளுக்கு இடையே ஏற்படும் நோய் பரவல் ஆகும். கொரோனா வைரஸ் மற்றும் கெனைன் டிஸ்டம்பர் பரவல் காரணமாக இந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

சிகிச்சை

சிகிச்சை

தனிமைப்படுத்தப்பட்ட சிங்கங்கள் தீவிரமாக கவனிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி நிலா என்ற பெண் சிங்கம் பலியானது. தற்போது இன்னொரு சிங்கமும் இன்று வண்டலூரில் பலியாகி உள்ளது.

மரணம் எப்படி

மரணம் எப்படி

மோசமான இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டும், உணவும் சாப்பிடாமல் இந்த பத்மநாபன் என்ற சிங்கம் துடிதுடித்து பலியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட 9 சிங்கங்களில் 2 சிங்கங்கள் பலியானது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளனர்.

English summary
One more Vandalur Lion dies due to Coronavirus, 7 more lions are positive in the zoo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X