சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முருகன் சொன்ன 60": முதல்ல 60 வேட்பாளர்கள் இருக்காங்களா.. கலகல சர்வே.. கலாய்த்த வாசகர்கள்!

பாஜக தனித்து நின்று வெற்றி பெற முடியுமா என்பது குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: 60 சீட் சும்மா நின்னாலே நாங்க ஜெயிப்போம் என்று எந்த நம்பிக்கையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை.. அவர் சொன்னதில் இருந்தே இந்த 60 சீட் மீதே தமிழக மக்களின் கவனம் குவிந்துள்ளது.. முதல்ல 60 வேட்பாளர்கள் கட்சியில் இருக்காங்களா என்ற கேள்விதான் நம் வாசகர்களிடம் எழுந்துள்ளது... அது நாம் நடத்திய ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்பிலும் வெளிப்பட்டுள்ளது.

எல்.முருகன் மாநில பொறுப்பை ஏற்று கொண்டதில் இருந்தே கட்சிக்குள் ஒருசில மாற்றங்கள் நடந்து வருகின்றன.. ஒரு சில அதிரடிகளும் நடந்து வருகின்றன.. ஆனால், இவைகளில் பெரும்பாலும் தமிழக மக்கள் நலன் சார்ந்தது இல்லை.. கட்சிக்குள்ளேயே நடந்து வரும் செயல்பாடுகளும், மாற்றங்களும்தான் அவை,

நிர்வாகிகளுக்கு பொறுப்பு தருவது, ஒரு கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பது என உள்கட்சி விவகாரங்களில்தான் கவனம் செலுத்தி வருகிறார்.. விபி துரைசாமி முதல் முருகனின் வியூகங்கள் இல்லாமல் இல்லை.

போலீஸ் தள்ளிவிட்டும் அஞ்சி பின்வாங்காத ராகுல் காந்தி.. பிரியங்காவுடன் இன்று ஹத்ராஸ் செல்கிறார் போலீஸ் தள்ளிவிட்டும் அஞ்சி பின்வாங்காத ராகுல் காந்தி.. பிரியங்காவுடன் இன்று ஹத்ராஸ் செல்கிறார்

கிரிமினல் நடவடிக்கை

கிரிமினல் நடவடிக்கை

அதேசமயம், பாஜக உறுப்பினர்கள் பலம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று தெரியவில்லை.. ஏற்கனவே இருக்கும் பாஜகவினர் சிலரும் கட்டுக்கோப்புடன் இல்லை.. இவர்களில் சிலர் கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.. கையில் அரிவாளுடன் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.. இதை பற்றி கேட்டால், அவர்களை திருத்த போவதாக தலைமையிடம் இருந்து பதில் வருகிறது.

சர்வே முடிவு

சர்வே முடிவு

இப்படிப்பட்ட சமயத்தில்தான் முருகன் கடந்த மாதம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "தமிழகத்தில் தனித்து நின்றாலும் ஜெயிக்க கூடியதாக 60 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக பலம் கூடியுள்ளது நாங்கள் நடத்திய சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.. வருங்காலம் பாஜகவின் காலம்... தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபையில் பாஜக பெருமளவில் இருப்பர்" என்றார்.

சீட் பேரம்

சீட் பேரம்

அதுமட்டுமல்ல, "வழக்கு பதிய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதும் வழக்கு போட வேண்டும்" என்ற ஒரு வார்த்தையை தனது பேட்டியில் சொல்லி இருந்தார்.. மறைமுகமாக 60 சீட் கேட்டும், வழக்கு, கேஸ் என்று வார்த்தையை பிரயோகித்தும் அதிமுக ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை.

ஜெயிப்பார்கள்

ஜெயிப்பார்கள்

முருகனின் இந்த வார்த்தையை வைத்து நம் வாசகர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினோம்.. அதில், "பாஜக தலைவர் எல். முருகன் சொல்வது போல அக்கட்சி சட்டசபைத் தேர்தலில் 60 சீட்களில் வெல்லுமா?" என்று ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.. அதற்கு "கண்டிப்பாக ஜெயிப்பார்கள்" என்ற ஆப்ஷனுக்கு 10.38 சதவீதம் பேரும், "சான்ஸே இல்லை" என்ற ஆப்ஷனுக்கு 18.41 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "நோட்டாதான் வெல்லும்" என்ற ஆப்ஷனுக்கு 41.85 சதவீதம் பேரும், "60 வேட்பாளர்கள் இருக்காங்களா" என்ற ஆப்ஷனுக்கு 29.36 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

வாசகர்கள்

வாசகர்கள்

கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று மிக குறைந்த அளவே வாக்குகளை வாசகர்கள் பதிந்துள்ளனர்.. அதேசமயம் நோட்டா என்ற ஆப்ஷனுக்கு 41.85 சதவீதம் பேர் திரண்டு வந்து வாக்கை பதிந்துள்ளனர்.. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது 60 வேட்பாளர்கள் இருக்காங்களா என்ற ஆப்ஷன்தான் பெரும்பாலானோரை இழுத்துள்ளது.. 29.36 சதவீதம் பேர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

மக்கள் நலன்

மக்கள் நலன்

இது ஒரு சாதாரண கணிப்புதான்.. ஆனால் இதில் இருந்து ஒன்று மட்டும் விளங்குகிறது.. மக்கள் நலனில் எந்த அளவுக்கு கவனத்தை செலுத்தப்படுகிறதோ அந்த கட்சிகள்தான் காலம் காலமாக ஆட்சியை பிடித்து வருகிறார்கள்.. அந்த வகையில், பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கி தரும் முயற்சியில் தமிழக பாஜக இதுவரை இறங்கவில்லை. நீட் தேர்வுக்கு பிள்ளைகள் இங்கே தவித்து கிடக்கும்போது, அது சம்பந்தமான அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

எந்த திட்டங்களும் நன்மைகளும் இதுவரை பெற்று தரவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக வேளாண் மசோதா விவகாரம் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.. இதையெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் தமிழக பாஜக உள்ளது என்பது தெளிவாகிறது.. அதனால், 60 என்று முருகன் அடித்து சொல்லியிருப்பது சாத்தியமில்லை என்பதே இந்த கணிப்பு நமக்கு தெரியப்படுத்தும் சேதி!

English summary
Oneindia Tamil opinion poll sees interesting facts on BJP victory chances in TN Assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X