சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெங்காயத்தை உரித்தால் மட்டுமில்லை.. தொட்டு பார்த்தாலே கண்ணீரை வரவழைக்கும் நிலை!

Google Oneindia Tamil News

சென்னை: வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் சிறிய வகை வியாபாரிகளும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் அரபிக் கடலில் இரு புயல்கள் உருவாகியதால் மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

Onion price goes to Rs. 100/Kg

இதனால் வெங்காயத்தின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் வெங்காயத்தின் விலை ரூ 100ஐ தாண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெங்காய வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இன்னும் 3 நாட்களில் மீட்டிங்.. அதே வெற்றி பார்முலாதான்.. உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ரெடி!இன்னும் 3 நாட்களில் மீட்டிங்.. அதே வெற்றி பார்முலாதான்.. உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ரெடி!

இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ 80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அது போல் சின்ன வெங்காயத்தின் விலை ரூ90-ஆக உள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள்தோறும் 60 லாரிகளில் வந்த வெங்காய மூட்டைகள் மழை காரணமாக 30 லாரிகளாக குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் அதன் விலை கிலோ ரூ 100க்கு உயரும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

English summary
As Rain continues Onion price hikes into Rs.100. Traders expresses their sadness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X