சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 170க்கு விற்பனை - வெங்காயம் போடாமல் சாம்பார் வைக்க இல்லத்தரசிகள் முடிவு

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. மழையால் அழுகி வரத்து குறைந்ததால் சின்னவெங்காயம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல மாவட்டங்களிலும் வெங்காய விலை உயர்ந்து வருவதால் சாம்பாரில் வெங்காயம் போடாமல் சமைக்க இல்லத்தரசிகள் முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

    தேனி: சின்ன வெங்காய விலை உயர்வு: சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி!
    Onion Price hike: Small onion costs Rs. Sale for 170

    அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய பொருள் வெங்காயம். தமிழக உணவுகளில் சின்ன வெங்காயத்திற்கு முக்கிய பங்குண்டு. சாம்பார். வெங்காய சட்னி, ஆம்லேட், அசைவ உணவுகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகைகள் இருந்தாலும், இவை ஒரே நன்மைகளைத் தான் கொடுக்கின்றன. மேலும் வெங்காயத்தில் புரோட்டீன், தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்றவைகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த வெங்காயத்தை பல நாடுகளில் மருந்துவ பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி நமது பாட்டி வைத்தியத்திலும் வெங்காயம் முக்கிய பங்கினை வகிக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.150 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. தங்க நகைகளுக்குப் பதிலாக வெங்காய நகைகள், பிறந்தநாள், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு வெங்காய பொக்கே பரிசு வழங்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பறந்தன.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த வெங்காயத்தை விற்பனை செய்து விலை உயர்வை கட்டுப்படுத்தினர். இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துள்ளது. கோவையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சியில் ரூ.120, திண்டுக்கல்லில் ரூ.145, கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.130க்கும் சின்ன வெங்காயம் விற்பனையாகிறது.

    மழையால் அழுகி வரத்து குறைந்ததால் சின்னவெங்காயம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பெரிய வெங்காயம் ஒருகிலோ ரூ.50வரை விற்கப்படும் நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயம் போடாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர் இல்லத்தரசிகள்.

    சமையல் கேஸ் விலை உயர்வு, சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வுகளால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    English summary
    The price of small onion hike in TamilNadu. In Coimbatore, a kilo of small onion retails for Rs. 170. Housewives have decided not to cook onions in sambar as onion prices are rising in many districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X