சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தாச்சு அடுத்த ஷாக்.. வெங்காயம் விலை உயருகிறது.. இந்த 2 மாதங்கள் சிக்கல்.. ஆய்வில் பகீர் தகவல்

அக்டோபர் நவம்பரில் வெங்காய விலை உயரக்கூடும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பண்டிகை காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெங்காய விலை உயரக்கூடும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் வெங்காய விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.. இதற்கு பல காரணங்கள் உள்ளன..

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோவில்களில் இனி 3 வேளையும் அன்னதானம் - தொடக்கி வைத்த முதல்வர்

பெட்ரோல் விலை உயர்வு, இயற்கை சீற்றம், உள்ளிட்ட காரணிகளே, பெட்ரோல் விலையை உயர்த்த அடிப்படையாக அமைந்துவிடுகிறது.

 வரத்து குறைவு

வரத்து குறைவு

வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால், பெருமளவில் வரத்து குறைந்துவிடும் அபாயம் உள்ளது.. இந்த மாநிலங்களில் வரத்து குறைந்தால், பெரிய வெங்காயம் விலை உயர்ந்துவிடும்.. அதேபோல, உள் மாவட்டங்களில் அதிகளவு விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் பதுக்கல் காரணமாகவும் விலை உயர்ந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர்.

 மத்திய அரசு

மத்திய அரசு


கடந்த வருடங்களில் பீகார் போன்ற மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் மறுக்க முடியாது.. இந்நிலையில், மீண்டும் வெங்காய விலை விரைவில் உயரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விளைச்சல்

விளைச்சல்

நம் தமிழகத்தை பொறுத்தவரை, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்துதான் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது... கடந்த 2019 இறுதியில் மழை காரணமாக விளைச்சல் முடங்கிவிட்டது.. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து நமக்கு வெங்காய வரத்து குறைந்துவிட்டது.. இதனால் கடும் விலை உயர்வால் இங்குள்ள விற்பனையாளர்களும் குறைந்த அளவே வெங்காயம் கொள்முதல் செய்தனர்.

 அதிகரிப்பு

அதிகரிப்பு

அதனால்தான், ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்கப்பட்டது.. இதனால், சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டனர்.. இந்தியாவில் பருவமழை சீராக இல்லாததால் வெங்காயத்தின் விலை செப்டம்பர் மற்றும் நவம்பரில் மறுபடியும் அதிகரிக்கக்ககூடும் என்று கிரைசில் ஆய்வு தெரிவிக்கிறது.

தொடக்கம்

தொடக்கம்

இந்தியாவில் இலையுதிர் அல்லது குளிர்கால தொடக்கத்தில் அறுவடை செய்வதற்காக, கோடைக் காலத்தின் தொடக்கத்திலேயே வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது... இந்த காலத்தில் பருவமழை சீராக இருந்தால்தான், சரியான அறுவடை செய்யமுடியும்.. ஒருவேளை பருவமழை மாறி பொழிந்தால், பயிர் அறுவடை செய்ய தாமதமாகும்..

பருவமழை

பருவமழை

ஆகஸ்ட் 30, 2021 நிலவரப்படி பருவமழை 9 சதவீதமாக குறைந்துவிட்டதாம்.. பருவமழை சீராக இருந்தால் 75% வெங்காயம் அறுவடையாகும்... அதிலும் மகாராஷ்டிராவில் 35% உற்பத்தி செய்யப்படும்.. ஆனால், மகாராஷ்டிராவில் வெங்காய பயிர் நடவு செய்வதில் ஏற்பட்டுள்ள சவால் காரணமாக, இந்த ஆண்டும் வெங்காயம் விலை நிச்சயம் உயரக்கூடும் என்று கிரைசில் ஆய்வு கூறுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

அதுமட்டுமல்லாமல், இந்த வருடம் மே மாதம் டாக்டே புயல் பெரிய சேதத்தை உண்டுபண்ணிவிட்டது.. சேமித்து வைக்கப்பட்ட ராபி பயிர்களும் பாதிக்கப்பட்டுவிட்டது.. இதுபோன்ற பேரிடர் காரணமாக, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் ஈரப்பதம் அதிகமாகி, வெங்காயத்தின் சேமிப்பு தாங்கும் சக்தி குறைவாகிவிடும்.. இதனால் சப்ளை குறைவாகி போவதுடன், விலையும் அதிகமாகும் என்று கிரைசில் ஆய்வு தெரிவிக்கிறது.. குறிப்பாக, பண்டிகை காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் வெங்காய விலை உயரக்கூடும்.

English summary
Onion prices set to climb again in September and november during monsoon in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X