சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலை.. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    OnionPricehike | வெங்காய விலையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! | Twitt book

    சென்னை: கேட்டாலே கண்ணீரை வரவழைத்த வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துவிட்டது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்.

    சமையலில் முக்கிய அங்கம் வகிப்பது வெங்காயமும், தக்காளியும்தான். இவற்றின் விலை அதிகரித்தால் மற்ற காய்களின் விலையும் கிடுகிடுவென உயரும் என்பது எழுதப்படாத விதியாகும்.

    Onions price decreases in Koyambedu Market

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை, கியார் புயல், மஹா புயலால் கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    2-ஆவது நாளாக வாகன கட்டுப்பாட்டு தொடக்கம்.. ஓரளவுக்கு உயர்ந்தது காற்றின் தரம்.. மக்கள் நிம்மதி2-ஆவது நாளாக வாகன கட்டுப்பாட்டு தொடக்கம்.. ஓரளவுக்கு உயர்ந்தது காற்றின் தரம்.. மக்கள் நிம்மதி

    இதையடுத்து ஏற்கெனவே தேக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளும் மழையில் சிக்கி அழுகி போயின. வெங்காய வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ 100 வரை விற்பனை செய்யப்பட்டன.

    தற்போது மழை சற்று ஓய்ந்ததால் வெங்காய வரத்து அதிகரித்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் அதிகளவில் வரத் தொடங்கிவிட்டன. இதையடுத்து சில்லறை விற்பனையில் ரூ 70 -க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 4 குறைந்து ரூ 66-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

    English summary
    Flow of Onion are increased in numbers as soon as its price decreases Rs 4 /kg in Chennai. Now it prices Rs. 66/kg.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X