• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வாங்க வாங்க.. கிலோ வெங்காயம் ரூ. 50.. தலைமைச் செயலகத்தில் விறு விறு.. வாங்கக் குவிந்த ஊழியர்கள்!

|
    Onion Price Hike | Public Opinion on Onion price hike

    சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ 50-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து அதை வாங்க அரசு ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு நிலவியது.

    வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விண்ணை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு வரத்து இல்லாததே காரணம் என சொல்லப்படுகிறது. வெங்காயத்தை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதித்தது.

    இந்த நிலையில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ 200 வரை விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் ரூ 180 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்.. போட்டி போட்டு வாங்கக் குவிந்த மக்கள்.. பரபரத்த கடலூர்!

    2 நாட்களுக்கு

    2 நாட்களுக்கு

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் வெங்காயத்தின் விலையும் கடந்த 2 நாட்களாக கிலோவுக்கு ரூ 10 முதல் 30 வரை குறைந்துள்ளது.

    வெங்காயம்

    வெங்காயம்

    பொதுமக்களை பாடாய்படுத்தும் வெங்காயத்தின் விலையேற்றத்தை கண்டித்து இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு வெங்காயத்தை இறக்குமதி செய்வதை போல் தமிழக அரசு சார்பில் ஆந்திரா மற்றும் நாசிக்கிலிருந்து மலிவு விலையில் வெங்காயத்தை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டது.

    வெங்காயத்தின் விற்பனை

    வெங்காயத்தின் விற்பனை

    அதன்படி தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் பசுமை பண்ணை நுகர்வோர் பாதுகாப்பு கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் வேன் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.

    1000 கிலோ விற்று தீர்ந்தது

    1000 கிலோ விற்று தீர்ந்தது

    கிலோ ரூ 50-க்கும் விற்பனை என்பதால் 500-க்கும் அதிகமான ஆண், பெண் ஊழியர்கள் தங்கள் பணிகளை அப்படியே போட்டுவிட்டு வெங்காயம் வாங்க முண்டியடித்தனர். நேற்று ஒரே நாளில் 1000 கிலோவுக்கும் அதிகமாக வெங்காயம் விற்றது.

    விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
    இன்றே பதிவு செய்யுங்கள்
    - பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Staffs from Chennai Secretariat left their work in mid way and gathered to buy Onion Which was sold at their premises for Rs 50 per Kg.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more