சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி.. கிடுக்கிப்பிடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்ளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. வீட்டில் இருந்தே போன் அல்லது கணினி மூலம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு ஹோம் வொர்க் கொடுப்பதும், டெஸ்ட் நடத்துவதும் வழக்கமாகி வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் படிப்படியாக நடத்தப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில்.. கவனமாக இருங்கள்.. பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த மெசேஜ்.. தமிழக அரசு உத்தரவு!இரவு நேரத்தில்.. கவனமாக இருங்கள்.. பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த மெசேஜ்.. தமிழக அரசு உத்தரவு!

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ஆனால் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாணவர்கள் பலர் இணைய வசதி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பலர் வீட்டில் வீடியோ குரூப் கால் செய்யும் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் கூட நடந்து வருகிறது.

கட்டாயம் இல்லை

கட்டாயம் இல்லை

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.எந்த காரணம் கொண்டும் மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு வர சொல்ல வற்புறுத்தக்கூடாது. மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.

மதிப்பெண் கூடாது

மதிப்பெண் கூடாது

ஆன்லைன் வகுப்பை வைத்து மதிப்பெண்களை போட கூடாது. ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மாவட்டம்தோறும் இது தொடர்பாக புகார் அளிக்க ஏற்கனவே இமெயில் முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் என்ன

புகார் என்ன

இது தொடர்பாக புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் மக்கள் தெரிவிக்கலாம். பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தினால் பெற்றோர்கள் புகார்கள் அளிக்கலாம். தமிழகத்தில் இணையவழி வகுப்பு அட்டவணைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் பள்ளிகள் அளிக்க வேண்டும். இந்த அட்டவணையை கட்டாயம் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Online class for school students is not compulsory says Tamilnadu Government in its order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X