சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்லைனில் கிளாஸ்களை தடுக்க முடியாது.. தடை அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் திடீர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பிற்கு தடை என அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் திடீரென அறிவித்துள்ளார்.

Recommended Video

    ஆன்லைனில் பாடம் எடுக்கலாம்: செங்கோட்டையன் பதில்!

    கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 3வது வாரத்தில் இருந்து பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. பள்ளி இறுதி தேர்வு நடைபெறாத நிலையில் 1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

     online classes issues : Tamilnadu education minister senkottayan explain

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் தான் இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு அறிவித்தால் தான் உறுதியாக தெரியவரும்.

    இந்த சூழலில்: ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்வர் தலைமையிலானஅரசு பல்வேறு பணிகளை செயல்பட்டு வருகிறது. எல்லா பணிகளிலும் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. பள்ளிகல்வித்துறை சார்பாக புதிதாக வகுப்பறையை நோக்கி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    முன்னதாக சென்னை, திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்டது. இப்போது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. பாடநூலை பொறுத்தவரையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கில் கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அச்சு, அசலாக கமல்ஹாசன் போலவே.. சினிமாவில் சொன்னவை அப்படியே நடக்கிறது.. நவீன 'நாஸ்டர்டாமஸ்' சூர்யா!அச்சு, அசலாக கமல்ஹாசன் போலவே.. சினிமாவில் சொன்னவை அப்படியே நடக்கிறது.. நவீன 'நாஸ்டர்டாமஸ்' சூர்யா!

    இப்படி அறிவித்த சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தக்கூடாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    Take a Poll

    English summary
    private school do not Taking online classes : Tamilnadu education minister senkottayan Warning
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X