சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்... பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு இல்லை - செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஐந்து நாட்களிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை.

Online classes suspended for 5 days in Tamil Nadu - Minister Sengottaiyan

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒருபக்கம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாகவும், ஐந்து நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

English summary
Minister Senkottayan has said that the online class will be stopped for 5 days in Tamil Nadu. Minister said the schools had not decided on reopening because of the Corona situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X