சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரியா.. பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டது தப்பாய்யா.. சுளையா 40,000 ரூபாய் போச்சே!

ஆன்லைன் மூலம் இளம்பெண் ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ரொம்ப பெரிய ஆசையெல்லாம் இல்லை.. ஒரு பிரியாணி சாப்பிடலாம்னு பிரியா ஆசைப்பட்டார். 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரத்தை இழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மாணவி பிரியா அகர்வால். இவர் தன் நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார். வயசு 21. நேற்று இவர் வடபழனிக்கு வந்துள்ளார்.

அப்போது பிரியாணி சாப்பிடலாம் என்று நினைத்து, 'ஊபர் ஈட்ஸ்' மூலம் ஆன்லைனில் ஹைதராபாத் பிரியாணி ஆர்டர் செய்தார். அதுக்கு பில் 76 ரூபாய் வந்தது. அதை ஆன்லைனிலேயே கட்டி விட்டார். ஆனால், என்னமோ தெரியவில்லை, ஆர்டர் கேன்சல் என்று வந்தது.

5 ஆயிரம்

5 ஆயிரம்

அதனால் கஸ்டமர் கால் செய்து கேட்டார் பிரியா. அதற்கு எதிர்முனையில் பேசியவர், "உங்களுக்கு 76 ரூபாய் திரும்ப வேணும்னா, 5 ஆயிரம் ரூபாய் கட்டுங்க. அப்படி கட்டினால் 5 ஆயிரத்துடன் அந்த 76 ரூபாயும் திரும்ப கிடைத்துவிடும்" என்று சொன்னார்கள்.

40 ஆயிரம்

40 ஆயிரம்

பிரியாவும், 76 ரூபாயை விட மனசில்லாமல், ஆன்லைன் மூலம் ரூ.5 ஆயிரம் பணத்தை கட்டினார். ஆனால் அவருக்கு அப்போது 2 பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அதனால் மறுபடியும் அதே நம்பருக்கு போன் செய்து கேட்டார். அதற்கு அந்த முனையில் பேசியவர்கள் இன்னொரு ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள், எல்லா பணமும் சேர்ந்து கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புகார்

புகார்

இப்படியே பிரியா 8 முறை 5 ஆயிரம், 5 ஆயிரம் என போட்டுள்ளார். மொத்தம் 40 ஆயிரம் + 76 ரூபாய் + பிரியாணி எல்லாம் போயே பேச்சு. இதெல்லாம் நடந்து முடிந்து பிறகு, 8 முறை ஏமாந்த பிறகுதான், நாம ஏமாந்துட்டோமோ என்று ஷாக் ஆகி வடபழனி போலீஸ் ஸ்டேஷன் போய் நடந்த சம்பவங்களையும், மெசேஜ்களையும் காட்டினார்.

கவனம் தேவை

கவனம் தேவை

இதன்பிறகு வடபழனி போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 76 ரூபாய் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, ரூ.40 ஆயிரம் இழந்த பெண்ணை நினைத்து அழுவதா, சிரிப்பதா? என தெரியவில்லை. ஆனால், இப்படி போலி சேவை எண்கள் நிறைய இணையத்தில் வலம் வந்து கொண்டிருப்பதால், இளைய தலைமுறையினர் உஷாராக இருப்பது அவசியம்!

English summary
Chennai Girl was cheated nearly 40 thousand through online when ordering 76 Rs worth Biriyani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X