சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம்: ஆன்லைன் மதுவிற்பனைக்கும் அனுமதி- நேரில் 3 நாளைக்கு ஒருவருக்கு ஒரு பாட்டில்தான் என நிபந்தனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் ஒருநபர் 2 மதுபாட்டில்கள் வாங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

Recommended Video

    டாஸ்மாக் கடைகளை திறக்க தயாரான தமிழகம்

    தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. இதற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

     Online sale of Lliquor allowed in TN: Madras High Court

    இந்த வழக்கு விசாரணையின் போது ஆன்லைனில் மதுபானங்கள் விற்பது சாத்தியமா? வீடுகளில் நேரடியாக கொண்டு தர முடியுமா? என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ஆன்லைன் மூலமான விற்பனை சாத்தியம் இல்லை என கூறியிருந்தது.

    இதனையடுத்து தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகளை நிபந்தனைகளுடன் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் மதுபான கடைகளுக்கு நேரில் சென்றால் 3 நாட்களுக்கு ஒருநபருக்கு ஒரு மதுபாட்டில்தான் விற்பனை செய்ய வேண்டும்; ஆன்லைனில் அதிகபட்சமாக 2 மதுபாட்டில்களை விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது.,

    மேலும் மதுபானங்களை மொத்தமாக விற்றால் மதுகடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    English summary
    The Madras High Court today allowed to TamilNadu Govt. to sale of Lliquor in Online.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X