சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை!

Google Oneindia Tamil News

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Recommended Video

    சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு | Oneindia Tamil

    நாடு முழுவதும 4வது முறையாக லாக்டவுன் அமலில் உள்ள போது தொடர்நது தளர்வுகளை மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்து, ரயில், விமான சேவைகளை தொடங்கி அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக பயணிகள் விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது.

    Only 25 flights per day are allowed by the Tamil Nadu government

    இந்நிலையில் விமான சேவைகளுக்கு அனுமதி அளிப்பதை மத்திய அரசு மாநில அரசுகளிடம் விட்டுவிட்டது. பல மாநில அரசுகளின் அறிவுறுத்தல்படி படிப்படியாக விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், பிற மாநிலங்ளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

    பயணிகள் விமான போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்குத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு

    இதற்கிடையே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்த வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org - பதிவு செய்து இ-பாஸ் பெறலாம்.

    பிற மாநிலங்களில் இருந்து வரும் விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும் என்றும் 14நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான தகவல் கொடுக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    English summary
    domestic flights india : Only 25 flights per day are allowed by the Tamil Nadu government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X