சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு- 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்காக 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,549 ஆகும். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 69.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு- 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சைதமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு- 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை

கொரோனா மாவட்ட பாதிப்பு

கொரோனா மாவட்ட பாதிப்பு

சென்னையில் 1157; திருவள்ளூரில் 526 ; மதுரையில் 267; வேலூரில் 253; திருவண்ணாமலை 212; விருதுநகர் 145; செங்கல்பட்டு 179; திண்டுக்கல் 126; கன்னியாகுமரி 146 பேருக்கு என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த மரணங்கள் எண்ணிக்கை 2,236

மொத்த மரணங்கள் எண்ணிக்கை 2,236

கொரோனா மரணங்களில் சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பிற மாவட்டங்களில் 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். மதுரையில் 5; திருவள்ளூரில் 7 ; வேலூரில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை மொத்தம் 2,236 ஆக அதிகரித்திருக்கிறது.

அதிகரித்த டிஸ்சார்ஸ் எண்ணிக்கை

அதிகரித்த டிஸ்சார்ஸ் எண்ணிக்கை

அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகி இருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 5,106 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையானது மொத்தம் 1,07,416 ஆக உள்ளது.

46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை

46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை

சென்னையில் 1712; செங்கல்பட்டு 262; கோவை 256; கடலூர் 54; கள்ளக்குறிச்சி 79; காஞ்சிபுரம் 239; மதுரை 679; திருவள்ளூர் 450; வேலூர் 246 என ஒவ்வொரு மாவட்டத்திலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதித்தவர்கள், உயிரிழந்தோர், வீடு திரும்பியவர்கள் அடிப்படையில் தற்போதைய நிலையில் மொத்தமே 46,714 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
Only 46,714 Persons or Active Cases under Treatment for Coronavirus in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X