சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹோ.. 36 பேரில் வெறும் 6 பேருக்குத்தான் வாய்ப்பு.. முக்கியமான விஷயத்தை மறந்த ஓபிஎஸ் - இபிஎஸ்!

லோக்சபா தேர்தலில் அதிமுகவில் மிக முக்கியமான வேட்பாளர்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலில் அதிமுகவில் மிக முக்கியமான வேட்பாளர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவில் மிக முக்கியமான வேட்பாளர்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெறும் 6 எம்.பிக்களுக்கு மட்டுமே அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதிமுக லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராகிவிட்டது. அதிமுக தமிழகத்தில் பாஜக, பாமக, தேமுதிக என்று பெரிய கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது.

    நேற்றுதான் அதிமுக தனது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் இந்த வேட்பாளர் பட்டியல் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

    டாக்டர் vs டாக்டர்.. தர்மபுரியில் களமிறங்கும் அன்புமணி.. திமுகவின் அதிரடி திட்டம் என்ன தெரியுமா? டாக்டர் vs டாக்டர்.. தர்மபுரியில் களமிறங்கும் அன்புமணி.. திமுகவின் அதிரடி திட்டம் என்ன தெரியுமா?

    அதிமுக எம்பி மரணம்

    அதிமுக எம்பி மரணம்

    இந்த நிலையில் 37 தமிழக அதிமுக எம்.பிக்களில் அதிமுக எம்பி ராஜேந்திரன் கடந்த மாதம் பலியானார். சாலை விபத்தில் இவர் பலியானார். இதனால் தமிழகத்தில் அதிமுக எம்.பிக்களின் பலம் 36 ஆக குறைந்தது.

    எத்தனை பேருக்கு வாய்ப்பு

    எத்தனை பேருக்கு வாய்ப்பு

    இந்த நிலையில் இந்த 36 பேரில் வெறும், 6 எம்பிகளுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 30 எம்.பிக்களுக்கு அதிமுகவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    பெரிய கோபம்

    பெரிய கோபம்

    இது அதிமுக எம்.பிக்கள் மத்தியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான பலர் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் 20 பேருக்கு மட்டுமே சீட் கொடுக்க முடியும் என்பதால் பலருக்கு வாய்ப்பு பறிபோய் இருக்கிறது .

    யார் பெற்றது

    யார் பெற்றது

    லோக்சபா தேர்தலில், அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு பெற்ற எம்பிக்கள் 6 பேர் மட்டுமே. இவர்களின் விபரம் பின்வருமாறு.

    தென் சென்னை- ஜெயவர்த்தன்
    திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்
    காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்
    பொள்ளாச்சி- மகேந்திரன்
    கரூர்- தம்பிதுரை
    ஆரணி- செஞ்சி ஏழுமலை

    புதிய வேட்பாளர்கள்

    புதிய வேட்பாளர்கள்

    லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக புதிதாக போட்டியிடும் வேட்பாளர்கள் 14 பேரின் விபரம்.

    சேலம்- சரவணன்
    நாமக்கல்- காளியப்பன்
    கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி
    ஈரோடு- ஜி மணிமாறன்
    திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன்
    திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
    சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்
    பெரம்பலூர்- என் ஆர் சிவபதி
    தேனி- ரவீந்திரநாத்
    மதுரை- ராஜ் சத்யன்
    நீலகிரி (தனி)- தியாகராஜன்
    திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்
    நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன்
    மயிலாடுதுறை- ஆசைமணி

    வாய்ப்பு மறுப்பு

    வாய்ப்பு மறுப்பு

    எம்பிக்கள் அன்வர் ராஜா, கே .பரசுராமன், எஸ்.ஆர் விஜயகுமார், கே.காமராஜ், ஆர்.பாரதி மோகன், டி.ராதாகிருஷ்னன் ஆகிய முக்கிய வேட்பாளர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் அதிமுகவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    காரணம்

    காரணம்

    அதிமுக இந்தமுறை 39 தொகுதிகளிலும் தமிழகத்தில் போட்டியிடவில்லை. 20 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிகவுக்கு நிறைய இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால், அதிமுகவில் முக்கியமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Only 6 MP got the ticket again in AIADMK: 30 MP got no Chance again in Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X