சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு ரத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Southern Railway - இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயிலவே அறிவிப்பால் அதிர்ச்சி

    சென்னை: அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு அனுப்பி சுற்றறிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது திருமங்கலம் அருகே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு மொழி பிரச்னை தான் காரணம் என்பதால் இப்படி ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ரயில்கள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழிப்பிரச்னை தான் காரணம் என தெரியவந்தது.

    only hindi or english should be used to office language, dont use tamil, says southern railway

    ஒரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் தமிழில் ரயிலை அனுப்ப வேண்டாம் என சொன்னதை, இந்தி மட்டுமே தெரிந்த மற்றொரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரியாக புரிந்து கொள்ள தெரியாமல் ரயிலை அதே பாதையில் அனுப்பிவிட்டுள்ளார். இதுவே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு கொண்டு சென்றது.

    இதையடுத்து தெற்கு ரயில்வ அதிகாரி சிவா என்பவர் அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவரச சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.

    அந்த அறிவிப்பில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில்வே இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் செய்ய வேண்டும். இருவரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசி கொள்ள வேண்டும். தமிழில் பேசிக்கொள்ளக்கூடாது. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பிராந்திய மொழிகளை (தமிழ் உள்பட) பேசக்கூடாது பணியில் இருக்கும் போது இதனை கண்டிப்பாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    only hindi or english should be used to office language, dont use tamil, says southern railway

    இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நேரடியாக இந்தி திணிப்பு என கடுமையான எதிர்ப்பு தெரிவித்து திமுக இன்று தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன்பின்னர் மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து உத்தரவை திரும்ப பெறுமாறு மனு அளித்தனர். அதனை ஏற்று இந்தி ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ரத்து செய்து செய்து உத்தரவிட்டார்.

    English summary
    southern railway new announcement that only hindi or english should be used to office language, don't use tamil in office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X