சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் டிஜிபி நியமனம்.. காலவரம்பு 6 மாதமாக மாற்றம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிஜிபி நியமனம் 6 மாதமாக மாற்றம், உச்சநீதிமன்றம் அதிரடி!- வீடியோ

    சென்னை: டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

    தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி டிகே ராஜேந்திரனின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிய உள்ளது. இதையடுத்து இன்னும் 2 வருடங்களில் பதவி விலக கூடிய அதிகாரி ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும்.

    டிகே ராஜேந்திரன் ஜூன் மாதம் பணி நிறைவை அடைவதால், புதிய நபரின் பெயர் இன்றே பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு இதை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.

    பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.. அதிரடி திருப்பம் வருமா? பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.. அதிரடி திருப்பம் வருமா?

    என்ன விதி

    என்ன விதி

    உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் கூறிய தீர்ப்பில் இந்த விதிகளை விதித்து இருந்தது. அதன்படி புதிதாக தேர்வு செய்யப்படும் டிஜிபிக்கள் மூத்த அதிகாரிகளாக இருக்க வேண்டும், அவர்கள் பணி நிறைவு பெற 2 வருடமாவது அவகாசம் இருக்க வேண்டும். அவர்களின் பெயர்களை மூன்று மாதங்களுக்கு முன் புதிய டிஜிபியாக பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியது.

    யாரும் இல்லை

    யாரும் இல்லை

    ஆனால் தமிழகத்தில் இன்னும் 2 வருடங்கள் பதவி காலம் இருக்க கூடிய மூத்த அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2 வருடம் பணி காலம் உள்ள மூத்த அதிகாரிகள் இல்லை. முக்கிய அதிகாரிகள் எல்லாம் ஒரு வருடத்தில் பணி நிறைவு பெற போகிறார்கள், என்று கூறியது. அதனால் உச்ச நீதிமன்ற விதியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

    என்ன மனுதாக்கல்

    என்ன மனுதாக்கல்

    இதைப்போலவே பல்வேறு மாநில அரசுகள் இதில் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற 6 மாத பணிக்காலம் இருந்தாலும் பணிமூப்பு அடிப்படையில் அதிகாரிகளை டிஜிபியாக நியமிக்கலாம்.

    தீர்ப்பு இதுதான்

    தீர்ப்பு இதுதான்

    2 வருடம் பணிக்காலம் உள்ளவர்களைதான் நியமிக்க வேண்டும் என்றில்லை என்று தீர்ப்பை மாற்றி இருக்கிறது. ஆனால் மாநில அரசு டிஜிபிக்களை சுயமாக நியமிக்க முடியாது என்றும் யுபிஎஸ்சி மட்டுமே மாநில அரசின் பரிந்துரையை ஆய்வு செய்து டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

    English summary
    Only officers with minimum 6 months of tenure left to be appointed as DGP orders Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X