சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா எதிர்பார்க்காத மூவ்.. ஆபரேஷன் அந்தமானை கையில் எடுத்த இந்தியா?. அடுத்தடுத்து நடந்த 3 டிவிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: சீனாவிற்கு எதிராக கடல் வழியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்தியா ஆபரேஷன் அந்தமான் என்ற திட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Indian Ocean- ஐ பாதுகாக்க நடவடிக்கை... operation Andaman திட்டத்தை எடுத்த India

    இந்தியாவின் ஆபரேஷன் அந்தமான் திட்டம் குறித்து கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்திய பெருங்கடலில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்தியா இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியானது.

    முக்கியமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மூலம் சீனாவிற்கு செக் வகைக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் அந்தமான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்று கூறினார்கள். இதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய தொடங்கி உள்ளது.

    அரசின் கோழைத்தனம்.. லடாக்கில் இந்தியா பெரிய விலைகொடுக்க போகிறது.. ராகுல் காந்தி கருத்து!அரசின் கோழைத்தனம்.. லடாக்கில் இந்தியா பெரிய விலைகொடுக்க போகிறது.. ராகுல் காந்தி கருத்து!

    இந்திய பெருங்கடல் ஏன்?

    இந்திய பெருங்கடல் ஏன்?

    இந்திய பெருங்கடல் மீது பல வருடங்களாக சீனா கண் வைத்து இருக்கிறது. தென் இந்தியாவிற்கு செக் வைக்கும் வகையிலும், பாகிஸ்தான், இலங்கை உடன் தொடர்பு கொள்ள வசதியாகவும் இந்திய பெருங்கடலை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. இந்த பகுதி வழியாக சர்வதேச கடல் பகுதியில் சீனாவின் ராணுவ போர் கப்பல்கள் அவ்வப்போது உலவுவது வழக்கம். இந்தியாவிற்கு இங்கு எப்போது அச்சுறுத்தல் தரலாம் என்று சீனா திட்டமிட்டு வருகிறது.

    ஆபரேஷன் அந்தமான் என்றால் என்ன?

    ஆபரேஷன் அந்தமான் என்றால் என்ன?

    இந்த நிலையில் சீனாவை இங்கு கட்டுப்படுத்தும் வகையில்தான் இந்தியா ஆபரேஷன் அந்தமான் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மிக எளிமையானது. அதே சமயம் சக்தி வாய்ந்தது.

    1. இந்த திட்டத்தின்படி அந்தமான் நிக்கோபார் பகுதியில் இருக்கும் நிலப்பகுதியை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு திறந்து விடுவது.

    2. இங்கு இந்த மூன்று நாடுகளின் போர் விமானங்களை இறங்க அனுமதிப்பது.

    3. இங்கு இந்த மூன்று நட்பு நாடுகளின் போர் கப்பல்களை, நீர்முழ்கி போர் கப்பல்களை ரோந்து பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது ஆகியவை ஆபரேஷன் அந்தமான்.

    சீனாவை தடுக்கும்

    சீனாவை தடுக்கும்

    இந்த திட்டம் மூலமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மொத்தமாக முறியடிக்க முடியும் என்கிறார்கள். தென் சீன கடல் எல்லையில் தவறவிட்டதை தற்போது இந்திய பெருங்கடலில் முன்னெச்சரிக்கையாக செய்ய இந்த நாடுகள் முடிவு செய்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் தற்போது 90% இடத்தை சீனா உரிமை கோருகிறது.

    சீனாவின் தந்திரம்

    சீனாவின் தந்திரம்

    இதே கடல் எல்லையில்தான் மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நாடுகளின் கடல் பகுதியையும், சர்வதேச கடல் பகுதியையும் சேர்த்துதான் சீனா இப்படி சொந்தம் கொண்டாடுகிறது. இதேபோல் இந்திய பெருங்கடலில் சீனா எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதால் இந்தியா ஆபரேஷன் அந்தமான் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காக மூன்று விஷயங்களை இந்தியா செய்து முடித்துள்ளது.

    முதல் விஷயம் என்ன

    முதல் விஷயம் என்ன

    அதன்படி இந்தியா ஜப்பான் கடற்படையுடன் எல்லையில் போர் பயிற்சி செய்தது. கடந்த மாதம் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் போர் கப்பல்களும் இந்தியாவின் போர் கப்பல்களும் சேர்ந்து இப்படி போர் பயிற்சி செய்தது . எதிர்காலத்தில் அந்தமானை திறந்து விடுவதற்கு வசதியாக இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.சீனாவின் எதிரியான ஜப்பான் உடன் இந்தியா கூட்டு வைத்தது.

    அடுத்த விஷயம்

    அடுத்த விஷயம்

    இரண்டாவதாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்ற இந்திய கடற்படை போர் பயிற்சியை மேற்கொண்டது. சீனா எதிர்பார்க்காத வகையில் தற்போது இந்தியா தனது போர் கப்பல்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பி அங்கு போர் பயிற்சிகளை செய்து வருகிறது. இந்திய கடற்படையின் போர் கப்பல்கள், அணு ஆயுத கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்களில் இருக்கும் விமானங்கள் எல்லாம் அங்கே போர் பயிற்சிகளை செய்து வருகிறது. தென் சீன கடல் எல்லை மோதல் மற்றும் லடாக் மோதல் இருக்கும் நிலையில் சீனா இப்படை செய்து வருகிறது. இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவு இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

    மூன்றாவது என்ன

    மூன்றாவது என்ன

    அதற்கு அடுத்து இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவிற்கு இதேபோல் அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பெருங்கடலில் போர் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. குவாட் (quad) குழுவில் இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து விரைவில் இங்கு போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்கிறார்கள். ஆபரேஷன் அந்தமான் திட்டத்தை கையில் எடுக்கவே, இந்தியா இப்படி செய்து வருகிறது என்கிறார்கள்.

    English summary
    Operation Andaman: India navy training in Andaman - Nicobar may be a bigger plan against China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X