• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஆபரேஷன் துரைமுருகன் ஆரம்பம்... மு.க. அழகிரியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்?

|

சென்னை: திமுகவுக்கு எதிராக குடைச்சல் கொடுக்கக் கூடியவராக கருதப்பட்ட மு.க. அழகிரியை சமாதானப்படுத்துகிற வகையில் திமுக புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிப்பதாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மு.க. அழகிரியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்ட போதே அக்கட்சியின் சீனியர்கள் சிலர் அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இப்படித்தான் இருக்கும் என பூடகமாக கூறியிருந்தனர். பாமகவுடன் கூட்டணி, பாஜகவுடன் இணக்கம், மு.க. அழகிரியுடன் சமாதானம் இந்த மூன்றையும் எப்படியும் கனகச்சிதமாக துரைமுருகன் செய்து முடிப்பார் என கூறப்பட்டது.

அதிமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்.. இதுதான் முப்பெருவிழா சபதம்.. ஸ்டாலின் பேச்சு!

துரைமுருகனின் முயற்சி

துரைமுருகனின் முயற்சி

திமுகவினரால் ஆபரேஷன் துரைமுருகன் என இது சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் எதிரொலியாகத்தான், திமுக கூட்டணிக்குள் பாமக வரலாம் என்கிற தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அண்மைய பேட்டியும் பல திரைமறைவு நகர்வுகளின் வெளிப்பாடாக இருந்தது. குறிப்பாக விசிகவுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை என ராமதாஸ் பகிரங்கமாக கூறியிருந்தார்.

திமுக அணியில் பாமக, விசிக?

திமுக அணியில் பாமக, விசிக?

இருந்தபோதும் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விடுதலை சிறுத்தைகள் இந்த அணியில் நீடிக்க வாய்ப்பில்லை. இதனைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும், பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என கூறியிருக்கிறார். பாமகவுடன் கூட்டணி இல்லை- ஆனால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என விளக்கங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அழகிரியின் நறுக் விமர்சனங்கள்

அழகிரியின் நறுக் விமர்சனங்கள்

துரைமுருகன் ஆபரேஷனின் அடுத்த கட்டம் தென்மண்டலத்தை நோக்கி திரும்பியிருப்பதாகவே தெரிகிறது. கருணாநிதி குடும்பத்து மூத்த பிள்ளை தான் என சொல்லி வரும் துரைமுருகன் இப்போது குடும்பத்துக்குள் சமாதான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம். திமுகவைப் பொறுத்தவரை கொள்கை ரீதியான விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலடி தந்துவருகிறது. ஆனால் மு.க. அழகிரி நறுக் நறுக் என வைக்கும் விமர்சனங்களுக்கு திமுக பதில் தந்தது இல்லை.

அழகிரியுடன் தொலைபேசியில் ஸ்டாலின் பேச்சு?

அழகிரியுடன் தொலைபேசியில் ஸ்டாலின் பேச்சு?

குறிப்பாக திமுக தலைமையை சாடி ஓரிரு வரிகள் மு.க. அழகிரி சொன்னாலும் அதுவே தலைப்புச் செய்திகளாகிக் கொண்டிருந்தன. அண்மைக்காலமாக மு.க. அழகிரி தரப்பில் எந்த ஒரு மூவ்-ம் இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்களும் இனியும் அண்ணன் ஆக்டிவ்வாக செயல்படமாட்டார்; தாய் கழகத்துக்கே திரும்பிவிடலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில்தான் மு.க. அழகிரி உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதையடுத்து ஸ்டாலின், அழகிரியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
According to the sources DMK President MK Stalin talks with his brother and Former Union Minister MK Azhagiri.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X