சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ்களை திறந்து விட்டது.. "வேற வழியில்லைங்க".. முதல்வர் செய்ததுதான் சரி.. மக்கள் ஏகோபித்த ஆதரவு!

பஸ், ரயில்கள் ஓட அனுமதித்ததை மக்கள் வரவேற்றுள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: "வேற வழியில்லைங்க".. பஸ்களையும், ரயில்களையும் விடுவதற்கு அனுமதி தருவதை தவிர எடப்பாடி அரசுக்கு "வேறு வழியில்லைங்க" என்று நம் வாசகர்கள் திரண்டு வந்து தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். அதேசமயம், "அவசரப்பட்டுட்டாங்களே" என்றும் சிலர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி என்ற அறிவிப்புகளை முதல்வர் ஒன்றும் சும்மா அறிவிக்கவில்லை.. அதற்கு முன்பு பலமுறை யோசித்தார்.. பல்வேறு தரப்பில் ஆலோசனை செய்தார்.. நேரடியாக தொற்று பாதித்த மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.. சுகாதார அதிகாரிகளுடன் கலந்து பேசினார்.

Opinion Poll: People are Ok with govt for opening Bus transport in Tamil Nadu

இதைதவிர, உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றும் சில தமிழக நிபுணர்களுடன் முதல்வர் அடிக்கடி உரையாடி வந்துள்ளார்.. அவர்களின் கருத்துக்களையும் பரிசீலித்துள்ளார். தளர்வுகளை ஒவ்வொரு துறையிலும் அதிகமாக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தவாறே இருந்துள்ளனர்.

அதேபோல, இ-பாஸ் முறை வேண்டாம் என்பது உட்பட மத்திய அரசு அனுமதி கொடுத்தும் எடப்பாடியார் அதை உடனே அமல்படுத்தவில்லை.. இதற்கு நடுவில்தான், எதிர்க்கட்சிகள் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தனர்.

இறுதியில், எதிர்க்கட்சிகளின் கடுமையான நெருக்கடி, மக்களின் கோரிக்கை, மத்திய அரசின் தொடர் வற்புறுத்தல், இயல்பாகவே தமிழகத்தில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான் பஸ், ரயில்விட அனுமதி அளித்துள்ளார்.. இப்படி எல்லாவற்றையும் திறந்துவிட்டால், தொற்று இன்னும் அதிகமாக பரவும் என்பதும், அதன்மூலம் மறுபடியும் அரசுக்குதான் நெருக்கடி என்பதும், இதைவைத்து கொண்டு எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிப்பார்கள் என்பதும், இறுதியில் அது தேர்தலில் தங்களுக்கு பாதகமாக எதிரொலிக்கவே செய்யும் என்பதும், எல்லாமே எடப்பாடியாருக்கு நன்றாகவே தெரியும்.

எனினும், "செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி - தமிழக அரசு" என்பது பற்றி நம் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்து ஒரு கருத்து கணிப்பும் நடத்தினோம்.. அதில், "நல்ல முடிவு" என்று 28.84 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.. "அவசரப்பட்டுட்டாங்களே" என்று 17.26 சதவீதம் பேரும், "வேற வழியில்லைங்க" என்ற ஆப்ஷனுக்கு 44.49 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.. "கட்டுப்பாடு தொடர்ந்திருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 9.42 சதவீதமும் வாசகர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

"கட்டுப்பாடு தொடர்ந்திருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 9.42 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. தொற்று அதிகமாக பரவிவிடுமே என்ற கவலையில் இவர்கள் இந்த வாக்கினை பதிவு செய்துள்ளதாகவே தெரிகிறது. அதேபோல, "நல்ல முடிவு" என்ற ஆப்ஷனுக்கு 28.84 சதவீதம் பேரும், "வேற வழியில்லைங்க" என்ற ஆப்ஷனுக்கு 44.49 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர் என்றபோதே, மக்களின் கோரிக்கைக்கு எடப்பாடியார் செவிசாய்த்துள்ளார் என்பது தெரியவருகிறது.

செப். 7 முதல்.. தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.. பஸ், ரயில் போக்குவரத்துக்கு அனுமதி செப். 7 முதல்.. தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.. பஸ், ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

அதாவது இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் போலும்.. 5 மாதமாக கையில் காசு இல்லாமல் தவித்து, வேதனையில் உழன்று வந்தவர்கள் போலும்.. அந்த வகையில், முதல்வரின் டவுள் அறிவிப்பானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதைதான் இந்த கருத்து கணிப்பு பிரதிபலிக்கிறது.

அறிவிப்புகளை வரவேற்று மக்கள் என்னதான் பாராட்டினாலும் சரி, வரவேற்றாலும் சரி, தொற்று அதிகமாகிவிட்டால், மறுபடியும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

English summary
Opinion Poll: People are Ok with govt for opening Bus transport in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X