சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக எம்பிக்களின் செயல்பாடுகள் மோசம்.. கருத்துக் கணிப்பில் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் மிக மோசம் என சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய எம்.பிக்களின் செயல்பாடுகள் எப்படி என்ற ஆய்வில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் மிக மோசம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சி வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தற்போதைய மக்களவை உறுபினர்களின் சேவைகள், செயல்பாடுகள் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தின. இதில் தமிழக எம்.பி.க்களின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் கடைசி இடத்திற்கு முந்தின இடத்தை பெற்றுள்ளது.

இந்த ஆய்வில் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 20178 வாக்காளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 52.4 % மக்கள் தங்களது எம.பி.க்களின் செயல்பாடுகள் திருப்தி தரும் அளவில் உள்ளது என்றும் அவர்களின் சேவை மகிழ்ச்சியை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முதலிடத்தில் கேரளா

முதலிடத்தில் கேரளா

16% மக்கள் அவர்களின் சேவைகள் மன நிறைவை தருகிறது என்றும் 24 % மக்கள் அனைத்து எம்.பி க்களும் மன நிறைவை தருமளவுக்கு செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

நம்பர் 2 ராஜஸ்தான்

நம்பர் 2 ராஜஸ்தான்

14 729 வாக்காளர்கள் கலந்து கொண்ட ராஜஸ்தான் கருத்துக் கணிப்பில் தங்கள் மாநில எம்.பி க்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை தருவதாக 38.8 சதவிகிதம் மக்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து எம்.பி.க்களின் செயல்பாடுகளும் திருப்தி தரும் அளவில் இல்லை என்று 24 % மக்கள் தெரிவித்துள்ள நிலையில் 29% மக்கள் தங்களது எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாட் பேட் என்று தெரிவித்துள்ளனர்.

குஜராத் 3வது இடம்

குஜராத் 3வது இடம்

குஜராத் மாநிலத்தில் 14 957 வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது இதில் கலந்து கொண்டவர்களில் 36.3% வாக்காளர்கள் தங்களது எம்.பி. க்களின் செயல்பாடுகள் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர் 31.6% வாக்காளர்கள் தங்களது எம்.பி க்கள் பரவாயில்லை என்றும் 27.5% வாக்காளர்கள் பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர்.

நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா

நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் 30.1% வாக்காளர்கள் தங்களது எம்.பி.க்கள் சூப்பர் என்றும் 35.1% வாக்காளர்கள் எம்.பி.க்களின் செயல்பாடுகள் திருப்தி தருகிறது என்றும் 29.4% வாக்காளர்கள் அனைவரது செயல்பாடுகளும் திருப்தி தரவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த மாநிலத்தில் 29136 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

5வது இடம் தெலுங்கானா

5வது இடம் தெலுங்கானா

இது போல தெலுங்கானா மாநிலம் 5 வது இடத்தை பெற்றுள்ளது இந்த மாநிலத்தில் 20228 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டதில் 35.8% வாக்காளர்கள் தங்களது எம்.பி.க்கள் சிறந்த செயல்பாடு கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளனர். 26% வாக்காளர்கள் தங்களது எம்.பி.க்களின் செயல்பாடுகள் திருப்தி என்றும் அனைத்து எம்.பி.க்களின் செயல்பாடுகளும் திருப்தி என்று கூற முடியாது என்று 26.1% வாக்காளர்கள் கூறியுள்ளனர்

உ.பியுடன் மோதும் தமிழகம்

உ.பியுடன் மோதும் தமிழகம்

தமிழ்நாட்டில் 27268 வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வில் 18.2% வாக்காளர்கள் தங்களது எம்.பி.க்கள் நன்றாக செயல்படுகிறார்கள் என்றும், 23.3% வாக்காளர்கள் திருப்தி என்றும், 43% வாக்காளர்கள் பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த ஆய்வில் தமிழ்நாட்டு மாண்புமிகு உறுப்பினர்கள் கடைசி இடத்திற்கு முந்தின இடத்தையே பெற்றுள்ளனர். கடைசி இடத்தில் உத்திரப் பிரதேசம் உள்ளது.

English summary
C Voters opinion poll has revealed that the performance ot Tamil Nadu MPs is worst.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X