சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் போராட்டம்.. கலவரங்கள் ஏன்.. அதுவும் இங்கெல்லாம்தான் நடக்குது.. சரத்குமார் பகீர் புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவர்கள் போராட்டம்.. கலவரங்கள் ஏன் சரத்குமார் பகீர் புகார்

    சென்னை: தவறான பிரச்சாரங்கள் மூலம் மாணவ்ர்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், "குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக இதற்கு நாடு முழுவதும் கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த போராட்டங்கள் என்பது சமத்துவ மக்கள் கட்சி பார்வையில் இந்த தவறான புரிதலால் நடத்தப்படுகிறது" என்றார்.

    Opposition parties provoke students by False Propaganda: says actor sarath kumar

    குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்கிறது. ஆனால் யூகங்கள் அடிப்படையில் பொய்யான பிரசாரங்களால் கலவரம் அதற்கு எதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சரத்குமார் விமர்சித்தார்.

    இந்த போராட்டங்கள் குறிப்பாக பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலே நடத்தப்படுவதாகவும் சரத்குமார் குற்றம்சாட்டினார்.

    அரசியல் நோக்கத்தோடு கலவரங்களை உருவாக்கப்படுவதாகவும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு வன்முறை நடைபெறுவதாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது பேட்டியின் போது குற்றம்சாட்டினார்.

    தடுப்பு மையமா?.. பொய்யான தகவலை அளித்து முஸ்லீம்களை தவறாக வழி நடத்துகிறது காங்.. பிரதமர் மோடி தடுப்பு மையமா?.. பொய்யான தகவலை அளித்து முஸ்லீம்களை தவறாக வழி நடத்துகிறது காங்.. பிரதமர் மோடி

    எதிர்க்கட்சிகள் .புரிதல் இல்லாத காரணத்தால் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் இலங்கை தமிழர்களுக்கான குடியுரிமை சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக சரத்குமார் தெரிவித்தார். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி இருப்பதாக வலியுறுத்தி இருப்பதாகவும்.இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிசீலனை செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    English summary
    actor sarath kumar on citizenship amendment ac: opposition parties provoke students by False Propaganda
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X