சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அதிரடி.. அதிமுக தலைமை அலுவலகம் இனி "எம்ஜிஆர் மாளிகை" என பெயர் மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகை என அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் இனி "எம்ஜிஆர் மாளிகை" என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை அறிவித்துள்ளனர்.. மேலும் அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொன்விழாவை கொண்டாட கழக உடன்பிறப்புகளும், கழகத்தின் மீது பேரன்பு கொண்ட அன்பர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இவ்வேளையில், பொன்விழா கொண்டாட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை கழக நிர்வலாகிகள் பங்கேற்ற கூட்டம் தலைமை கழகத்தில் சிறப்புற நடைபெற்றது.

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களை விட்டு அகலாது, வருடங்கள் கழிந்தாலும் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா வள்ளல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1972ம் நாள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும் புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லை இல்லா மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்றும் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத அரசியல் சக்தியும் மக்கள் தொண்டில் நிகரில்லாததும் அதிமுக மட்டுமே என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியை தரிசித்த மக்கள் - வெள்ளியன்று கோவில் திறப்பால் மகிழ்ச்சி காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியை தரிசித்த மக்கள் - வெள்ளியன்று கோவில் திறப்பால் மகிழ்ச்சி

அதிமுக

அதிமுக

தமிழ்நாடில் மட்டுமல்லாது, நாடெங்கும் கிடைத்த வரவேற்பை கண்டும், தேசியஅளவில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல இருப்பதை அறிந்தும் புரட்சி புரட்சித்தலைவர் கழகத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை அவரது உடன்பிறப்புகளின் இதயத் துடிப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50ம் ஆண்டு விழாவையொட்டி கீழ்காணும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 மாநாடு

மாநாடு

கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல். பொன் விழா கொண்டாட்ட சிறப்பு இலட்சினை லோகோ வெளியிடுதல். பொன்விழா இலட்சினை பதிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழகம் முன்னோடிகளுக்கு அணிவித்தல். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா, கழக ஒருங்கிணைப்பாளர், கழக வினை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது படங்களுடன் கழகத்தின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையிலான ஒரே மாதிரியான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் புதுப்பொலிவுடன் அமைத்தல்.

பொன்விழா

பொன்விழா

கழகத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கவுரவித்தல். பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பொன் விழா மாநாட்டில் சான்றிதழும் பரிசும் வழங்கி சிறப்பித்தல்.

 எம்ஜிஆர் மாளிகை

எம்ஜிஆர் மாளிகை

கழகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல். தலைமைக் கழகத்திற்கு புரட்சித்தலைவர் 'எம்ஜிஆர் மாளிகை' என பெயர் சூட்டுதல். தலைமை கழக பேச்சாளர்கள் கலைக்குழுவினர் கௌரவித்து உதவி செய்தல். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தி அந்தந்த மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பொன்விழா நாணயம் மற்றும் பதக்கம் வழங்குதல்.

 ஒளிபரப்பு

ஒளிபரப்பு

உறுப்பினர் பெயர் விவரம் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்குதல் பொற்கிழி அளித்தல். புரட்சித் தலைவரைப் பற்றியும் தலைவி அம்மாவைப் பற்றியும் கழகம் பற்றியும் நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கௌரவித்தல். எம்ஜிஆர் மனங்களிலிருந்து கழகப் பணிகளை தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்தல் சுருள் போன்ற வரலாற்று நிகழ்வுகளை கொண்ட விளம்பர படம் தயாரித்து தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்புதல்.

 ஆலோசனைகள்

ஆலோசனைகள்

விழாவை மேலும் சிறப்பு பெறும் வகையில் கழக நிர்வாகிகள் தெரிவிக்கும் பல்வேறு ஆலோசனைகளும் பரிசோதனை செய்து இந்த பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும். அதிமுக 49 ஆண்டுகளை கடந்து பொன்விழா காணும் இவ்வேளையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செயற்கரிய சாதனை படைத்திருக்கிறது.

 பட்டியல் இனம்

பட்டியல் இனம்

உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் சத்துணவு திட்டம், அம்மா உணவகம், சமூக நீதியை நிலைநாட்டி, வளர்சிசிக்கான வாய்ப்புகளை எல்லாருக்கும் வழங்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கும், பட்டியல் இனத்தோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வழிசெய்த சிந்தனை புரட்சி, ஏழை எளிய வறுமைக்கோட்டக்கு கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புத்தம் புதிய திட்டங்கள் என்று காலமெல்லாம் நிலைத்திருக்கும் மக்கள் நல்வாழ்வு பணிகளை இந்திய நாட்டக்கே அறிமுகம் செய்த ஆட்சி, அதிமுக.

 கழக பணிகள்

கழக பணிகள்

கழக ஆட்சி மீண்டும் மலர்ந்து மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று வளர்ச்சி பாதையில் அமைதியான தமிழ்நாடு உருவாகி, கழகத்தின் பொன்விழா ஆண்டில் சூளுரைத்து கழக பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதே எங்கள் பொன்விழா செய்தியாகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
OPS and EPS announces today, ADMK Office name changes into MGR House
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X