சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீதி வீதியாக போகும் ஓபிஎஸ் குடும்பம்.. பணத்தை வாரி இறைக்கும் தங்கம்.. சிவனேன்னு இருக்கும் ஈவிகேஎஸ்!

தேனியில் குடும்பத்துடன் ஓ பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Theni Lok sabha constituency: மும்முனை போட்டியில் தேனி தொகுதி- வீடியோ

    சென்னை: முதலமைச்சர், துணை முதல்வர், அரசியல் பலம், பண பலம், செல்வாக்கு, புகழ்... என இத்தனை துணை இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் தேனி வீதிகளில் குடும்பத்துடன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    முதல்வருக்கு இந்த முறை சேலம் தொகுதி வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஓபிஎஸ்சுக்கு தேனி தொகுதியும் முக்கியம்! தன்மான பிரச்சனை, கவுரவ பிரச்சனை!

    கட்சி வேட்பாளர் தோற்பது வேறு, பெத்த மகனே தோற்பது வேறு. அதனால் இருக்கும் மற்ற தொகுதிகள், வேட்பாளர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டுதான் தேனிக்குள்ளேயே ரவுண்டு கட்டி வருகிறார் ஓபிஎஸ்.

    புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்... காரணம் என்ன ? புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்... காரணம் என்ன ?

    கள்ளர் சமூகம்

    கள்ளர் சமூகம்

    இதற்கு மற்றொரு காரணம் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன். ஓபிஎஸ் தேவர் சமூகம் என்றால் தமிழ்செல்வன் கள்ளர் சமூகம். இந்த தொகுதியில் கள்ளர் சமூகம்தான் அதிகம். அதனால் சாதிய ஓட்டுகளில் பலமாக இல்லாமல் இருக்கிறார் ஓபிஎஸ்.

    வாரி இறைக்கிறார்

    வாரி இறைக்கிறார்

    அதனால் சில "தாராளங்களை" காட்ட ஓபிஎஸ் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல தங்க தமிழ்செல்வனும் தொகுதி மக்களிடம் "நிறைய" வளைந்து கொடுத்து போனாலும் ஓபிஎஸ் அளவுக்கு இல்லையாம்! தேனியில் தெரு தெருவாக ஓபிஎஸ் பணத்தை வாரி இறைக்கிறார் என்று தங்க.தமிழ்செல்வன் ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது சரியில்லைதான்!

    வெற்றி எனக்கே

    வெற்றி எனக்கே

    ஆனால் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல, 10 பைசா செலவு செய்யாமல், எந்தவித ரிஸ்க் எடுக்காமல், "வெற்றி எனக்குதான்" என்று அசால்ட்டாக சொல்லி கொண்டிருக்கிறாராம் திமுக கூட்டணி ஈவிகேஎஸ் இளங்கோவன்!

    நம்பிக்கை

    நம்பிக்கை

    சொந்த ஊர்காரங்களான 2 வேட்பாளர்களே தேனி தொகுதியில் உயிரை கொடுத்து மல்லுக்கட்டி வரும்போது, ஈரோட்டிலிருந்து தேனியில் சீட் வாங்கி வைத்து கொண்டு, அதுவும் கூட்டணி கட்சியின் பலத்தை மட்டுமே நம்பிக் கொண்டு, நான்தான் வெற்றி பெறுவேன் என்ற அதீத நம்பிக்கையில் இளங்கோவன் சொல்லி கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறதாம்.

    ஆரூண்

    ஆரூண்

    இவருக்கு சரியான நபரை ஹாருண்தான்.. இளங்கோவனுக்கு தேர்தலில் என்னென்ன தேவையோ, அவரே எல்லாவற்றையும் பார்த்து கொண்டு செய்து "முடித்துவிடுவார்" என்று சொல்கிறார்கள்.!

    அசால்ட் வேட்பாளர்

    அசால்ட் வேட்பாளர்

    அதிமுக, அமுமுக என ரெண்டு பேர் மீதுள்ள அதிருப்தி ஓட்டுக்கள் அப்படியே அலேக்காக தனக்குதான் விழும் என்று இளங்கோவன் நினைத்து கொண்டிருக்கிறாராம். அது மட்டுமில்லை.. அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் தேனி பிரச்சாரத்தில் பேசி கொண்டிருந்தபோது, மற்ற வேட்பாளர்கள் கை வணங்கி மக்கள் முன்பு நிற்க, இளங்கோவன் மட்டும் அசால்ட்டாக நின்று கொண்டிருந்தாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    சாதி, பணம்

    சாதி, பணம்

    எப்படியோ இப்போதைக்கு தேனி தொகுதியில் பலத்த போட்டி அமமுக, அதிமுகவுக்குதான்.. இதில் சாதீய வாக்குகள் என்று விழுந்தால் ஒரு கட்சியும், பணத்தை பார்த்து வாக்குகள் விழுந்தால் மற்றொரு கட்சியும்தான் ஜெயிக்க வாய்ப்புள்ளதாம்! பொறுத்திருந்து பார்ப்போம்.. இன்னும் கொஞ்ச நாள்தானே!

    English summary
    There is a tough between O Panneerselvam and Thanga Tamil Selvan in Theni Constitution. But Congress is said to be less likely to win.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X