• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஓபிஎஸ் உதிர்த்த தத்துவம் வீணா போய்ரும் போலயே.. மக்கள் கருதுவது இதைத்தான்.. படிச்சு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: "எது நடந்ததோ.. எது நடக்கிறதோ.. எது நடக்க வேண்டுமோ.. அதுவும் நன்றாகவே நடக்கும்.. ஓபிஎஸ் கருத்து குறித்து நீங்க என்ன சொல்றீங்க?" என்று நம் வாசகர்களிடம் கருத்து கேட்டதற்கு, "எது நடந்தா எனக்கென்ன" என்று சலிப்புடன் வாக்கை செலுத்தி உள்ளனர்.

விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவித்து தேர்தலை சந்திக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யலாம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தி வருகின்றன.

இது சம்பந்தமான ஆலோசனையும் இரு தரப்பிலும் நடந்து வருகின்றன.. இவர்கள் இருவரையும் அமைச்சர்கள் இப்படி மாறி மாறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.. இதனால் சில தினங்களாகவே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர்- ஓபிஎஸ் பொதுச்செயலாளர்? அதிமுகவின் நாளைய க்ளைமாக்ஸ் இதுதானாம்! ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர்- ஓபிஎஸ் பொதுச்செயலாளர்? அதிமுகவின் நாளைய க்ளைமாக்ஸ் இதுதானாம்!

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

நேற்றுகூட ஆலோசனை நடந்தது.. இப்படிப்பட்ட சூழலில்,ஓபிஎஸ் திடீரென தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

கீதை

கீதை

பொதுவாக, கீதையை எடுத்துக்காட்டாக தமிழக அரசியலில் உதாரணம் காட்டடப்படுவது அபூர்வம் என்றாலும், இதை ஓபிஎஸ் நேற்று பயன்படுத்தி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரத்தத்தின் ரத்தங்கள் குழம்பின.. இந்த சமயத்தில் நாமும் நம் வாசகர்களிடம் ஒரு சுவாரஸ்ய கணிப்பு ஒன்றை நடத்தினோம்.

நல்லா நடக்கும்

நல்லா நடக்கும்

அதில், "எது நடந்ததோ.. எது நடக்கிறதோ.. எது நடக்க வேண்டுமோ.. அதுவும் நன்றாகவே நடக்கும்.. ஓபிஎஸ் கருத்து குறித்து நீங்க என்ன சொல்றீங்க?" என்று நம் வாசகர்களிடம் கருத்து கேட்டிருந்தோம்.
அதற்கு "எதுவுமே நடக்கலையே" என்ற ஆப்ஷனுக்கு 33.96 சதவீதம் பேரும், "நல்லா நடக்கும்னு நம்பறோம்" என்ற ஆப்ஷனுக்கு 8.54 சதவீதம் பேரும் வாக்குகளை செலுத்தி உள்ளனர். "என்னென்னவோ நடக்குதே" என்ற ஆப்ஷனுக்கு 10.36 சதவீதம் பேரும், "எது நடந்தா எனக்கென்ன" என்ற ஆப்ஷனுக்கு 47.13 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

இதில் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு அம்சம், இவர்கள் இருவரின் உட்கட்சி மோதலை பெரும்பாலானோர் கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான்.. "எது நடந்தா எனக்கென்ன" என்ற ரீதியிலேயே வாக்குகளை பதிவிட்டுள்ளனர்.. "எதுவுமே நடக்கலையே" என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தியும் உள்ளனர்.. "நல்லா நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளவர்கள் வெறும் 8.54 சதவீதம் பேர்தான்.

மோதல்

மோதல்

அதனால், வெளிப்படையாகவே கருத்து மோதலில் ஈடுபட்டு, அதிமுக மக்களின் நம்பிக்கையை தேர்தல் வரும் சமயத்தில் இழந்துவிடுகிறது என்பதே நமக்கு வெளிப்படுகிறது.. இது ஒரு கணிப்புதான் என்றாலும், எந்த கட்சியிலும் இப்படி மோதி கொள்வதை தீவிரமான தொண்டர்கள் யாருமே விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை.

அவசியம்

அவசியம்

அதேசமயம், கீதையின் ஒருபாதியைதான் ஓபிஎஸ் சொல்லி உள்ளார்.. இதே கீதையில், "எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது, எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்" என்பதையும் ஓபிஎஸ் மட்டுமல்ல, இபிஎஸ்-ஸும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் என்றே சொல்ல தோன்றுகிறது.

English summary
OPS has very little support from the readers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X