சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்கிறாரா?.. ஓபிஎஸ் ஆதரவாளர் அளித்த பரபரப்பு பேட்டி!
சென்னை: சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்ற கேள்விக்கு அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உள்கட்சி பூசல் நடந்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்துள்ளது. இதில் 90 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு தருகிறார்கள்.
முண்டியடித்தும் பின்வரிசையில் ஓபிஆர்.. முகத்தில் ஈயாடாத ஓபிஎஸ்.. பன்னீரை தவிர்த்தாரா பிரதமர்?
இதற்கு காரணம், சட்டசபையில் திமுகவை புகழ்ந்தது, ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது, சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் பேசியது என்கிறார்கள்.

ஓபிஎஸ் மகன்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி எம்பி என்ற முறையில் முதல்வரை தனது தொகுதிக்கான வளர்ச்சி பணிகளுக்காக போய் சந்தித்தார் என்றாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை ஓபிஆர் ஒரு முறை கூட சந்தித்ததே இல்லை என்பதுதான் எடப்பாடி தரப்பின் ஆதங்கமாக இருக்கிறது.

சசிகலா ஆதரவு நிலைப்பாடு
மேலும் சசிகலா ஆதரவு நிலைப்பாடும் கட்சியினரை கலங்க செய்துள்ளது. சசிகலா உள்ளே வரக் கூடாது என தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் இன்று அவருக்கே ஆதரவாக இருப்பது நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. தேவர் ஜெயந்தி விழாவின் போது சசிகலா அதிமுகவில் இணைவது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதனால் ஓபிஎஸ்ஸை மூத்த நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர்.

தலைமை கழக நிர்வாகி
இந்த நிலையில் தற்போது ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்ததால் கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கீழ் தன்னால் இருக்க முடியாது என்பதால் சசிகலாவை அதிமுகவில் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி தரப்பின் திட்டங்களை முறியடிக்க சசிகலாவை சந்திப்ப்து என்ற முடிவில் ஓபிஎஸ் இருக்கிறாராம்.

நிராகரிப்பு
அதிமுக பொதுக் குழு தீர்மானத்தை நிராகரித்ததால் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர, துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலாவதியாகிவிட்டன என எடப்பாடி தரப்பு சொல்கிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்திலிங்கத்திடம் சசிகலா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ஓபிஎஸ் சசிகலாவை சந்திப்பாரா என்பது போன்ற கேள்விகள் எல்லாம் இப்போது தேவை இல்லை என்றார்.