• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நெருங்கும் சட்டசபை தேர்தல்.. தென் மாவட்டங்களில் 80 தொகுதிகளை வெல்ல ஓபிஎஸ் வகுத்த வியூகம்

|

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்களே உள்ள நிலையில் ஒபிஎஸ், தென் மாவட்டங்களில் 80 தொதிகளை வெல்ல அதிரடியாக வியூகம் வகித்திருப்தாக கூறப்படுகிறது,.

  தென் மாவட்டங்களில் 80 தொகுதிகளை வெல்ல ஓபிஎஸ் வகுத்த வியூகம் | Oneindia Tamil

  சட்டசபை தேர்தலில் அதிமுகவை வீழ்த்த இந்த முறை திமுக கடுமையாக முயற்சி எடுக்கும் என்பதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி வியூகங்களை அதிமுக கையில் எடுக்க போவதாக கூறப்படுகிறது.

  இந்த சூழலில் சமரசத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்த ஓபிஎஸ், வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதை அமைத்தார்.

  விஜய் எத்தனையோ முறை சொல்லியும் எஸ்ஏசி கேட்கவில்லை.. விஜய்யின் தாயார் ஷோபா பரபர பேட்டிவிஜய் எத்தனையோ முறை சொல்லியும் எஸ்ஏசி கேட்கவில்லை.. விஜய்யின் தாயார் ஷோபா பரபர பேட்டி

  5 பேர் யார் யார்

  5 பேர் யார் யார்

  இதன்படி எடப்பாடி ஆதரவாளர்கள் 6 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேரும் வழிகாட்டுகுழுவில் இடம் பெற்றார்கள். அவர்களில், ஜே.சி.டி. பிரபாகர் கிறிஸ்தவ வன்னியர், மனோஜ் பாண்டியன், நாடார், சைவ பிள்ளை இனத்தை சேர்ந்த பா.மோகன், யாதவர் வகுப்பை சேர்ந்த கோபால கிருஷ்ணன், தேவேந்திர குலத்தை சேர்ந்த சோழவந்தன் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோரை வழி காட்டுதல் குழுவில் இணைத்திருக்கிறார்.

  அனைத்து சமுதாயம்

  அனைத்து சமுதாயம்

  அனைத்து சமுதாயத்து வாக்குகளையும் கவரும் நோக்கில் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை வழிகாட்டுதல் குழுவில் இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது .

  தென் மாவட்டங்களில் அதிகம் உள்ள சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆதரவாளர்களை வழிகாட்டுதல் குழுவில் இடம் அளித்துள்ளாக கூறப்படுகிறது, இதன் மூலம் தென்மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் சார்ந்த சமுதாயத்தை சார்ந்தவர்களின் வாக்குகளை அள்ள முடியும் என்று கணக்கு போட்டிருப்பதாக கூறப்படுகிறது, அத்துடன் தென் மாவட்டங்களில் அனைத்து சமுதாய மக்களின் வாக்குகளை கவரும் வகையில் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்வு இருக்குமாம்.

  மலை கிராமம் சென்றார்

  மலை கிராமம் சென்றார்

  இது ஒருபுறம் எனில் ஒபிஎஸ் அண்மைக்காலமாக சத்தமே இல்லாமல் தனது சொந்த தொகுதியான போடியில், எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்பதை விசாரித்து அதை உடனே தீர்த்து வைக்கும்படி உத்தரவிட்டு வருகிறார். சமீபத்தில் தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த பகுதியின் குறுக்கே மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான குரங்கணி, கொட்டகுடி ஆறு செல்வதால் மழைக் காலங்களிலும், பருவ மழை காலங்களிலும், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

  வீடு கட்டித்தர உத்தரவு

  வீடு கட்டித்தர உத்தரவு

  அவர்கள் வசித்து வரும் வீடுகளும் மிகுந்த சேதமாகி உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். பின்னர், உடனடியாக 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். மேலும், அவருடைய உத்தரவை ஏற்று சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. தங்கள் கிராமத்திற்கு திடீரென துணை முதல்வர் வந்ததை கண்டு அந்த கிராம மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

  English summary
  With just six months to go before the assembly elections, the OPS is said to be strategizing to win 80 seats in the southern districts.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X