இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல..வேலிதாண்டி பறந்த வெள்ளாடுகள்! உற்சாக இபிஎஸ்! வெலவெலத்து போன ஓபிஎஸ்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், நேற்றுவரை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று திடீரென எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் நீக்க முடியுமா?. எம்ஜிஆர் வகுத்த விதி சொல்வதென்ன?
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
இந்நிலையில் இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இபிஎஸ் இல்லத்திற்கு வந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஓபிஎஸ் ஆதராவாளராக உள்ள நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2440ஆக அதிகரித்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இபிஎஸ்க்கு ஆதரவு
ஏற்கனவே அதிமுகவில் தனது செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், அதனை ஈடுகட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு கொண்டு வர வேண்டும் என சீனியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில் தற்போது கிடைத்திருக்கும் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அடுத்த பொதுக்குழு நடப்பதற்குள் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களையும், பொதுக்குழு உறுப்பினர்களையும் வளைக்க பேச்சு வார்த்தை தீவிரமாகி வருகின்றனர்.

பலே திட்டம்
தற்போதைய சூழலில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக முக்கிய தலைவராக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளார். அதற்கு அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி கிழக்கு அசோகன், தஞ்சாவூர் வைத்தியலிங்கம், தஞ்சாவூர் வடக்கு சுப்பிரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

ஓபிஎஸ் அதிர்ச்சி
ஆரம்பத்தில் 15 ஆக இருந்த ஓ பன்னீர் செல்வத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எண்ணிக்கை அடுத்து 11 ஆக குறைந்தது. பின்னர் திருவள்ளூர் அலெக்சாண்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் எடப்பாடி பக்கம் தாவிய நிலையில், அடுத்ததாக வேளச்சேரி அசோக்கும், மைத்ரேயனும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையில், நேற்று வரை தன் பக்கம் இருந்த பொதுக்குழு நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவியதால் ஓபிஎஸ் தரப்பு சற்றே அதிர்ச்சியில் உள்ளது.