சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலுவிழந்த ஓபிஎஸ்.. கொடி நாட்டிய எடப்பாடியார்.. கொங்கு மண்டலமா? தென்பாண்டி சீமையா.. இன்னும் இருக்கு!

கொங்கு மண்டலத்தின் செல்வாக்கு அதிமுகவுக்கு கூடி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "முதல்வர், துணை முதல்வர் இடையே நடந்து வரும் பிரச்சனையே சாதியை அடிப்படையாக வைத்து என்றுகூட சொல்லலாம்.. அதாவது கொங்கு மண்டலமா, தென்மண்டல சீமையா என்ற போட்டியே அதிமுகவுக்குள் எழுந்திருக்கிறது.. இதில் கொங்கு மண்டல தரப்பின் கையே உயர்ந்தும் வருகிறது" என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது.

Recommended Video

    அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்!

    யார் முதல்வர் வேட்பாளர் என்று நேற்றே சுமூக முடிவு எட்டப்பட்டு விடும் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று வேட்பாளராக எடப்பாடியாரை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்துள்ளதும், இப்போதும் நடந்து வருவதும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், நடந்து வரும் நிகழ்வுகளை பற்றி அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்களது உத்தேச கருத்து இதுதான்:

    அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்! அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்!

     சாதி

    சாதி

    "இந்த பிரச்சனையின் பின்னணியில் சாதியும் மறைமுக அரசிலயாகி உள்ளது.. இப்போதைய சசிகலா ஆதரவாளர்கள் நிறைய பேர் பொறுப்பில் உள்ளனர்.. ஜெயலலிதா இருந்தபோதே, கொங்கு மண்டலம் உள்ளிட்ட பல சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமித்தாலும், ஓபிஎஸ் போன்ற தேவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் தரப்பட்டது.

    ஜெயில்

    ஜெயில்

    சசிகலா இங்கு இருந்தவரை இதுதான் நடைமுறையாக இருந்தது.. அவர் ஜெயிலுக்கு போனபிறகுதான் காட்சிகள் மாற ஆரம்பித்தன.. எடப்பாடியாரின் ஆதரவால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகமானது. கொங்கு மண்டலத்தை எடப்பாடியார் மலையளவு நம்ப காரணமே, முதல்வராக பொறுப்பேற்று 2 முறை தேர்தலை சந்தித்ததுதான்.. அப்போது கொங்கு மண்டலம்தான் எடப்பாடியாரை தூக்கிவிட்டது.

    திமுக

    திமுக

    திமுக அப்போது சுதாரிக்க தவறிடுச்சு.. கொங்கு மண்டலத்தை மட்டும் திமுக கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்நேரம் ஸ்டாலினிடம் ஆட்சி இருந்திருக்கும்.. இதுதான் எடப்பாடியாருக்கு பெரிய பிளஸ் ஆகிவிட்டது.. இந்த 2 சட்டமன்ற தேர்தலை சந்தித்து, வெற்றி பெறவும்தான், அங்கிருந்து நிறைய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உருவானார்கள்.

     தேவர் சமூகம்

    தேவர் சமூகம்

    இப்போது நிலைமை என்னவென்றால், மதுரை மண்டலம் உட்பட பிற சாதியை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடியார் பக்கமே வந்துவிட்டனர். ஆனால், சரிந்து வரும் தனது செல்வாக்கை திரும்பவும் நிலைநிறுத்தவும், அதாவது தன் சமுதாயத்துக்கான முகமாக மாற்ற ஓபிஎஸ் நினைக்கிறார்.. இந்த சமயத்தில் மூக்கையா தேவர் சிலை திறப்பு விழாவையும் உற்று கவனிக்க வேண்டி இருக்கிறது... அந்த வகையில், இது கொங்கு மண்டலமா? தென்மதுரை சீமையா என்ற ரீதியில் அணுகினால் கொங்குதான் வென்றிருக்கிறது.

    சசிகலா

    சசிகலா

    இன்னொரு விஷயம், இப்போது முதல்வர் வேட்பாளர் கூட ஒரு விஷயமில்லை.. கட்சியை யார் கைப்பற்றுவது என்பதுதான் முக்கிய விவகாரமாக வெடித்துள்ளது.. தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் போன்றோரின் அபரிமிதமான ஆதரவையும் தாண்டி, சசிகலாவால் ஒதுக்கப்பட்டவர்களும் அதாவது, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம் போன்றோரும் தற்போது எடப்பாடியார் பக்கமே சாய்ந்துள்ளனர்.

     எடப்பாடியார்

    எடப்பாடியார்

    அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியை ஓபிஎஸ் முன்பேயே எடுக்க தொடங்கவிட்டாராம்.. ஆனால் ஒவ்வொரு முறை முயற்சி எடுக்கும்போதும், எடப்பாடியார்தான் எல்லாரையும் அரவணைத்து சென்றதாக தெரிகிறது.. இதுவும் ஒரு பிளஸ் ஆகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்த கட்சியிலும் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை... அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா வரை இதுவரை எல்லாமே ஒற்றை தலைமையின் கீழ்தான் நடந்து வந்துள்ளதால்தான், ஓபிஎஸ் விவகாரத்தை கிளப்பும்போதெல்லாம், இது ஒரு விஷயமாகவே யாரும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.

     புரிதல்கள்

    புரிதல்கள்

    அதேபோல, எப்போது, எங்கே ஒரு சின்ன பிரச்சனை என்றாலும், கொங்கு மண்டலம் மற்றும் ஆதரவாக உள்ள அமைச்சர்கள் எல்லாரும் முதல்வரை உடனடியாக சந்தித்து விவாதித்து வந்துள்ளனர்.. முதல்வரின் உத்தரவுப்படி அவர்களும் அதை செயல்படுத்தி வந்துள்ளனர்.. இதனாலேயே இவர்களுக்குள் புரிதல் நன்றாக இருந்து வந்துள்ளது.. அதனால், ஜெயலலிதா போல கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நிறைய நடவடிக்கைகளை எடப்பாடியாரும் எடுத்து வந்திருக்கிறார்.

     சுனில் டீம்

    சுனில் டீம்

    அதுமட்டுமல்ல... அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சை தொடங்க காரணமாக இருந்ததே எடப்பாடியார்தானாம்.. இதற்கு பின்னணியில் உள்ளது சுனில் டீம் தான் என்கிறார்கள்.. ஆக மொத்தம் கொங்கு லாபி இப்போது ஸ்டிராங் என்பதால், எப்படியும் தன் மகனுக்கு மத்திய துணை இணை அமைச்சர் பதவியை நிச்சயம் ஓபிஎஸ் கோரிக்கையாகவே முன்வைப்பார் போலும்.

     பெஸ்ட் சாய்ஸ்

    பெஸ்ட் சாய்ஸ்

    ஏற்கனவே இதை பற்றி விவாதிக்கப்பட்டதுதான் என்றாலும், இந்த கோரிக்கை இப்போது நிறைய வலுக்கவே செய்யும்.. அதுமட்டுமல்ல, திமுக பலம் பொருந்தி வரும் சமயத்தில், எடப்பாடியார் மாதிரியான ஆதரவுள்ளவர்களால்தான் அதனை எதிர்கொள்ள முடியும்.. அதிமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் திமுகவை தோற்கடிக்கும் சக்தி கிடையாது... அந்த வகையில் எடப்பாடிதான் கட்சிக்கும், ஆட்சிக்கும் பெஸ்ட் சாய்ஸ்" என்று சொல்லி முடித்து கொண்டனர்.

    English summary
    CM Edapadi palanisamys influence in the Kongu Zone has increased
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X