மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்!
சென்னை: இந்த செய்தியில் இருக்கும் புகைப்படத்தில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்பதை வைத்தே.. உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஈசியாக சொல்லிவிட முடியும்.
காதலில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். முக்கியமாக தங்கள் இணையை தேர்வு செய்வதில் பலருக்கும் பிரச்சனை இருக்கும். யாரை தேர்வு செய்வது.. நம்மை பிடித்தவர்களை காதலிப்பதா, நமக்கு பிடித்தவர்களை காதலிப்பதா என்ற குழப்பம் இருக்கும்.
5 நொடி டைம்.. இதுல 12 உருவம் இருக்கு.. உங்களுக்கு பர்ஸ்ட் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!
இந்த செய்தியை படித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கும் அது போன்ற குழப்பங்கள் இருக்கலாம்.. அப்படி இருக்கிறது என்றால் இந்த புகைப்படத்தை பாருங்கள். அதில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.
திறமையானவங்களுக்குத்தான் இந்த படத்துல இருக்குற பூனை தெரியுமாம்! முடிஞ்சா கண்டுபிடிங்க.. சவால்!

4 உருவம்
உங்களுக்கு 35 செகண்ட் டைம். இந்த படத்தில் நான்கு உருவங்கள் உள்ளன. ஒரு முறை போய் படத்தை பாருங்கள். என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். அதை வைத்தே உங்கள் காதல் வாழ்க்கை பற்றி கண்டுபிடித்து விடலாம். இந்த படத்தில் ஒரு மனிதனின் முகம், ஒரு பறவையின் உருவம், ஒரு கடல் கன்னி மற்றும் படகு, கடல் சிப்பிகள் உள்ளன. உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்!

பறவை
உங்களுக்கு முதலில் ஒரு பறவையின் உருவம் தெரிந்தால்.. நீங்கள் உங்களை அதிகம் கவனித்துக்கொள்ள கூடிய காதலியை தேடுகிறீர்கள் என்று அர்த்தம். அதாவது உங்களை அதிகம் care எடுத்துக்கொள்ள கூடிய ஒருவரை நீங்கள் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். அதேபோல் நீங்கள் உங்கள் காதலிக்கு அதிக உறுதுணையாக இருப்பீர்கள். உங்கள் காதலர், காதலிக்காக நீங்கள் எதையும் செய்யும் குணம் கொண்டவர். நீங்கள் மிகவும் நல்ல குணம் கொண்டவர். அதே சமயம் நீங்கள் அவசரமாக யாரையும் காதலிக்காமல், உங்கள் துணையை தேர்வு செய்வதில் பொறுமை காக்க வேண்டும்.

மனிதர்
உங்களுக்கு ஒரு மனிதரின் உருவம் தெரிந்தால்.. நீங்கள் அதிக எமோஷனல் குணம் கொண்டவர். அதேபோன்ற காதலியை நீங்கள் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு கடந்த காலங்களில் நிறைய காதல் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் மீண்டும் இணையை தேடுவதில் உங்களுக்கு சில குழப்பங்கள் இருக்கும். ஆனால் கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் மனதை புரிந்து கொள்ள கூடிய இணையை கண்டிப்பாக கண்டுபிடிப்பீர்கள். உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள கூடிய ஒருவரை விரைவில் பார்ப்பீர்கள்.

கடல் கன்னி
உங்களுக்கு ஒரு கடல் கன்னியின் புகைப்படம் மற்றும் படகுகளின் புகைப்படம் தெரிந்தால், நீங்கள் காதலில் மிகவும் ஸ்லோவான ஆள். காதலி, காதலன் தேவை என்றாலும், பெரிதாக அதற்காக முயற்சி எடுக்க மாட்டீர்கள். ஆனால் உங்களுக்கு காதலி, காதலன் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் போது.. உங்கள் துணையை எளிதாக கண்டுபிடித்து விட முடியும். உங்கள் காதலி பெரும்பாலும் உங்களை சுற்றித்தான் இருப்பார்.. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தேடிப்பாருங்கள் கண்டிப்பாக கிடைப்பார்.

சிப்பி
உங்களுக்கு சிப்பிகள் புகைப்படம் தெரிந்தால்.. நீங்கள் கொஞ்சம் பொருளாதார ரீதியாக சிந்திக்க கூடியவர். அதாவது பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும் காதலியை நீங்கள் தேட கூடியவர். நீங்கள் பெரும்பாலும் பொருளாதார வசதி குறைவு கொண்ட நபருடன் சேர்வதை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் கடந்த காலங்களில் பண ரீதியாக கஷ்டப்பட்டதால்.. பணக்கார இணையை தேடுகிறீர்கள். ஆகையால், இதை தவறு என்று நினைக்க வேண்டாம். எனவே நீங்கள் பொருளாதார வசதி கொண்டவரை தேடினால் உங்களுக்கு எளிதாக இணை கிடைக்கும். சொல்லுங்க உங்களுக்கு இந்த போட்டோவில் முதலில் என்ன தெரிந்தது?