சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

Google Oneindia Tamil News

இந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிளில் சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பி உள்ளதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

Order to telecast Sanskrit news on DD : tamil desiya periyakkam condemns

அதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமஸ்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.

யாருக்கும் தாய்மொழி இல்லாத சமஸ்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.

இப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமஸ்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும். இந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.

வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?

ஏற்கெனவே பல துறைகளில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்களின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.

இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு துறை இந்த சமஸ்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறித்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
The Union Government’s instruction to Doordarshan zonal station officers to telecast a news bulletin in Sanskrit every day, came in for criticism from tamil desiya periyakkam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X