சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒட்டப்பிடாரம்.. ஜெ.வை வென்று வேட்பாளரான மோகன்.. அலட்டிக்கொள்ளாத திமுக.. அதிரடி காட்டிய அமமுக

ஓட்டப்பிடாரத்தில் திமுக, அதிமுகவிடையே பலத்த போட்டி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ottappidaram constituency: தனித்தொகுதியான ஒட்டப்பிடாரத்தை வெல்லப்போவது யார்?- வீடியோ

    சென்னை: தனித்தொகுதியான ஒட்டப்பிடாரத்தை வெல்லப்போவது யார்? என தெரிவில்லை. ஆனாலும் இந்த தொகுதியில் சீட் வாங்க திமுக, அமமுகவைவிட அதிமுக எடுத்த சிரத்தை சொல்லி மாளாது!

    4 தொகுதி வேட்பாளர்களை முதலில் அறிவித்தது திமுகதான். அதன்படி ஒட்டப்பிடாரத்தில் சண்முகய்யாவை வேட்பாளராக அறிவித்தது.

    இவர் கட்சியில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இதனால் சண்முகய்யாவின் கட்சிப் பணிக்காக, அத்தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பலத்த போட்டி எல்லாம் திமுக தரப்பில் அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.

    அனந்தநாக்கில் முதல் கட்ட வாக்கு பதிவு... வாக்காளர்களை விட அதிகம் உலவிய காக்கிகளும், துப்பாக்கிகளும்! அனந்தநாக்கில் முதல் கட்ட வாக்கு பதிவு... வாக்காளர்களை விட அதிகம் உலவிய காக்கிகளும், துப்பாக்கிகளும்!

    விளக்கம் அளித்தார்

    விளக்கம் அளித்தார்

    அதேபோல அமமுகவில் சுந்தர்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஒரு காரணமும் உண்டு. 18 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டபோது, சுந்தர்ராஜை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயன்று இருக்கிறது. குறிப்பாக ஜெயக்குமார் தரப்பு அப்படி செய்ய முயன்றதாகவும், சுந்தர்ராஜ் அணி மாற போவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் உடனடியாக இதை மறுத்து விளக்கம் அளித்தார் சுந்தர்ராஜ்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    "அந்த தரப்பு வேண்டுமானால் எங்களுடன் வர சொல்லுங்கள், நாங்கள் சேர்த்து கொள்ளுகிறோம், ஆனால் எங்ககிட்ட இருந்து ஒரு ஆளை இழுக்க சொல்லுங்க பார்ப்போம்.. அது முடியாது" என்றார் உறுதியாக. இந்த விசுவாசம்தான் தினகரனை ஈர்க்க வைத்துவிட்டது. இதனை மனதில் வைத்தே சுந்தர்ராஜ்-க்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    அதிமுக

    அதிமுக

    திமுக, அமமுக ரொம்ப ஈசியாக வேட்பாளர்களை அறிவித்தாலும், ரொம்பவே மெனக்கட்டது அதிமுகதான்! ஒட்டப்பிடாரம் தனித் தொகுதி என்பதால் அங்கு வேட்பாளரை தேர்வு செய்வது அதிமுகவிற்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்றுதான் முதலில் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதிக்காக சீட் வாங்க வரிசைகட்டியவர்கள் நிறைய பேர்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இதில் பலத்த போட்டி கடம்பூர் ராஜூக்கும், மோகனுக்கும்தான்! தனக்கு சீட் தந்தே ஆக வேண்டும் என்று மோகன் விடாப்பிடியாக நிற்க, கடம்பூர் ராஜுவின் ஆப்ஷன் ஜெயலலிதாதான்.. அதாவது ஒட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் துணை தலைவர் பெயர்தான் ஜெயலலிதா.

    எம்ஜிஆர் விசுவாசி

    எம்ஜிஆர் விசுவாசி

    முன்னாள் மாவட்ட அவை தலைவர் தங்கராஜின் மகள்தான் இந்த ஜெயலலிதா. தீவிரமான, பாரம்பரிய அதிமுக குடும்பம். தன் மகன்களுக்கு அண்ணா, ராமச்சந்திரன் என்றும், மகளுக்கு ஜெயலலிதா என்றும் பெயர் வைத்த அளவுக்கு எம்ஜிஆர் விசுவாசி. அதனால்தான் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவுக்கு சீட் தந்தால், பெண்ணுக்கு சீட் தந்த முன்னுரிமை கட்சிக்கு கிடைக்கும் என்று வலியுறுத்தினார்.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    கடைசியில் நேற்று மோகன்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் இவர். தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக துணைச்செயலாளராகவும் உள்ளார். லோக்கலில் பலம் பொருந்திய விஐபிகள், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு எப்போதும் மோகனுக்குதான் தொகுதியில் உண்டு. இப்போது மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், கடம்பூர்ராஜு மற்றும் உள்ளூர் அதிமுக தரப்பில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரியவில்லை.

    இழுபறி

    இழுபறி

    எனினும் ஒட்டப்பிடாரத்தில் பலத்த போட்டி எல்லாருக்கும் முன்னாடி வேட்பாளரை அறிவித்த திமுகவுக்கும், இழுபறி முடிந்து கடைசியாக அறிவித்த அதிமுகவுக்கும்தான் என்று சொல்லப்படுகிறது! பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

    English summary
    There is a tough fight between AIADMK candidate Mohan and AMMK Sundaraj in Ottappidaram constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X