சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசின் தவறான நிர்வாகத்திறனால் தீவிர நெருக்கடியில் பொருளாதாரம்.. மன்மோகன் சிங் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசின் தவறான நிர்வாகத்திறனால் நெருக்கடியில் பொருளாதாரம் - மன்மோகன்

    சென்னை: இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார மந்த நிலை குறித்து ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

    இந்திய பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவதாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2019- 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக சரிந்துள்ளது.

    உற்பத்தி துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி துறையில் இதனை குறிப்பிட்டு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்பட பல்வேறு பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது.. காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினை அல்ல.. பாக். திடீர் பல்டிகாஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது.. காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினை அல்ல.. பாக். திடீர் பல்டி

    ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதம்

    இந்நிலையில் இந்திய பொருளாதார மந்த நிலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தவிட்டது என்றும் இந்தியாவில் நீண்ட நாளாக பொருளாதார தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாரமாக இது உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    தவறான கொள்கையால் வீழ்ச்சி

    இந்திய பொருளாதாரம் இதைவிட மிக விரைவான விகிதத்தில் வளரக்கூடிய ஆற்றல்களை கொண்டு இருந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தனது வீடியோவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    பணமதிப்பிழப்பு- ஜிஎஸ்டி குளறுபடி

    பணமதிப்பிழப்பு- ஜிஎஸ்டி குளறுபடி

    மேலும் உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் வெறும் 0.6 சதவிதமாக சரிந்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையை பார்க்கும் போது மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்பட்ட குளறுபடி ஆகியவற்றில் இருந்த இந்திய பொருளாதாரம் மீளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

    சொல்வதை கேளுங்கள்

    சொல்வதை கேளுங்கள்

    பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பழி வாங்கும் அரசியலை கைவிட்டு விட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பொருளாதார சிக்கலில் இருந்துநாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். மேலும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    English summary
    manmohan singh said that Our economy has not recovered from the man made blunders of demonetisation & a hastily implemented GST... I urge the govt to put aside vendetta politics & reach out to all sane voices to steer our economy out of this crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X