சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு

ஜூன் 12ஆம் தேதி குறிப்பிட்ட நாளில் அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மாநாட்டில் அறிவித்தது போல வேளாண் துறைக்கு திமுக முக்கியத்துவம் அளிக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளா

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை சென்று சேரும் வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    CM MK Stalin விளக்கம்! TASMAC Reopen ஏன்? | Corona Lockdown | Oneindia Tamil

    தமிழக முதல்வர் ஸ்டாலின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காவிரி ஆற்றில் மலர் தூவினார்.

    Our goal is to increase the cultivation of Kuruvai says Chief Minister Stalin

    அணையை திறந்த பின்னர் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தொடர்ந்து 2வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பின் மூலம் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

    ஜூன் 12ஆம் தேதி குறிப்பிட்ட நாளில் அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மாநாட்டில் அறிவித்தது போல வேளாண் துறைக்கு திமுக முக்கியத்துவம் அளிக்கும்.

    மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரைக்கும் சென்று சேர வேண்டும். அதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், 9 மாவட்டங்களில் 647 பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின் - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின் - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

    தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ. 65 கோடி மதிப்பீட்டில் 4061 கிமீ தூரத்திற்கு தூர்வாரம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் கூறினார்.

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் திறக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chief Minister MK Stalin said that our goal is to increase the cultivation of curry every year. Stalin also said that the authorities should monitor the flow of water from the Mettur dam to the outlets.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X